சீன-ருவாண்டா அரசுத் தலைவர்கள் சந்திப்பு

சரஸ்வதி 2018-07-24 09:27:24
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-ருவாண்டா அரசுத் தலைவர்கள் சந்திப்பு

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 23ஆம் நாள், சிகாலியில், ருவாண்டா அரசுத் தலைவர் ககாமேயுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இரு தரப்புத் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 47 ஆண்டுகாலத்தில், இரு தரப்புறவு பெற்றுள்ள சாதனைகளை இரு நாட்டுத் தலைவர்களும் ஆக்கப்பூர்வமாக மதிப்பிட்டனர். எதிர்காலத்தில் இரு நாடுகளின் நட்பார்ந்த ஒத்துழைப்பு திட்டத்தை அவர்கள் கூட்டாக வரைந்தனர்.

ஆப்பிரிக்க நாடுகளுடன் ஒன்றுபட்டு ஒத்துழைப்பது, வெளிநாட்டுக் கொள்கையின் முக்கிய அடிப்படையாகும். மென்மேலும் வலிமை மிக்க, ஒருமைபாட்டு மயமாக்க ஆப்பிரிக்காவை எதிர்பார்ப்பதாக ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

ஆப்பிரிக்காவின் மீதான சீனாவின் ஆதரவும் உதவியும் மிகவும் சிறப்பாக இருக்கிறது. சர்வதேச விவகாரத்தில், சீனாவின் முக்கியப் பங்களிப்பில், ஆப்பிரிக்கா மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது என்று ககாமே தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்