பிரிக்ஸ் நாடுகளின் கருத்தரங்கில் ஷீ ச்சின்பிங் முக்கிய உரை

2018-07-26 07:52:02
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பிரிக்ஸ் நாடுகளின் தொழில் மற்றும் வணிகக் கருத்தரங்கில் ஷீ ச்சின்பிங்கின் முக்கிய உரை

சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங் 25ஆம் நாள் அழைப்பின் பேரில் தென்னாப்பிரிக்காவின் ஜோன்ஸ்பெர்க்கில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் தொழில் மற்றும் வணிகக் கருத்தரங்கில் கலந்து கொண்டு, முக்கிய உரை நிகழ்த்தினார். சர்வதேச கட்டமைப்பு மாறி வரும் வரலாற்றுப் போக்கில் பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இரண்டாவது 10 ஆண்டுகளின் பொற்காலத்தில் புதிய பாய்ச்சலுடன் கூடிய முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

காலத்தின் ஓட்டத்துக்கிணங்க, கூட்டு வளர்ச்சியை நனவாக்குவது எனும் தலைப்பிலான உரையில், பிரிக்ஸ் நாடுகள் வரலாற்றுப் போக்கிற்கிணங்க, வளர்ச்சி வாய்ப்பை இறுகப்பற்றி, அறைகூவல்களைக் கூட்டாக கையாண்டு, புதிய ரகப் பன்னாட்டு உறவையும், மனித குல பொதுச் சமூகத்தையும் உருவாக்குவதற்கு ஆக்கப்பூர்வ பங்காற்ற வேண்டும் என்று ஷீ ச்சின்பிங் தெரிவித்தார். அவர் கூறியதாவது

வெளிநாட்டுத் திறப்பும் ஒத்துழைப்பும், அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றம் மற்றும் உற்பத்தி ஆற்றல் வளர்ச்சியின் இன்றியமையாத முடிவாகும். வர்த்தகப் போரில் ஈடுபட வேண்டாம். வர்த்தகப் போரில் யாரும் வெற்றி பெற முடியாது. பொருளாதார மேலாதிக்கவாதத்தைப் பின்பற்றக் கூடாது. ஏனெனில் இது சர்வதேசச் சமூகத்தின் பொது நலன்களைப் பாதிக்கும். பிரிக்ஸ் நாடுகள் திறந்த ரக உலகப் பொருளாதாரத்தைக் கட்டியமைத்து, ஒரு தரப்புவாதத்தையும் பாதுகாப்புவாதத்தையும் எதிர்த்து, வர்த்தகம் மற்றும் முதலீட்டின் தாராளமயமாக்கத்தையும், வசதிமயமாக்கத்தையும் விரைவுபடுத்தி, மேலதிக திறப்பு, இணக்கம், ஏற்றத் தாழ்வற்ற நிலை, கூட்டு நலன் மற்றும் பயன் என்ற திசையை நோக்கிப் பயணித்து உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு வழிகாட்ட வேண்டும். புதிதாக வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் வளரும் நாடுகள், குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் மிகுதியும் வளர்ச்சியடையாத நாடுகள் பொருளாதார உலகமயமாக்கத்தின் நலன்களைக் கூட்டாகப் பகிர்ந்து கொள்ளச் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது

2030ஆம் ஆண்டு தொடரவல்ல வளர்ச்சி நிகழ்ச்சி நிரல், பன்னாடுகளுக்குரிய ஒட்டுமொத்த செயல் திட்டத்தை வழங்கியுள்ளது. இந்நிகழ்ச்சி நிரலை, தமது நாட்டின் வளர்ச்சியுடன் இணைத்து, பொது மக்களை மையமாக கொண்டு, பொருளாதாரம், சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் வளர்ச்சியை ஒருங்கிணைத்து, பொது மக்களின் இன்பத்தை பிரிக்ஸ் நாடுகள் வலுப்படுத்த வேண்டும் என்று ஷீ ச்சின்பிங் தெரிவித்தார்.

ஆப்பிரிக்கா, வளரும் நாடுகள் அதிகமாக இருக்கும் கண்டமாகும். உலகில் வளர்ச்சிக்கு மிக அதிக உள்ளார்ந்த ஆற்றலைக் கொண்டுள்ள பிரதேசமுமாகும். ஆப்பிரிக்க நாடுகளுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்தி, ஆப்பிரிக்காவின் வளர்ச்சியை ஆதரிக்க வேண்டும். பிரிக்ஸ் நாடுகள் ஆப்பிரிக்க நாடுகளுடன் மேற்கொள்ளும் ஒத்துழைப்பை, தெற்குத் தெற்கு ஒத்துழைப்புக்கு முன்மாதிரியாக கொள்ள வேண்டும். வறுமை ஒழிப்பு, உணவுப் பாதுகாப்பு, புத்தாக்கம், அடிப்படை வசதிகளின் கட்டுமானம், தொழிற்துறைமயமாக்கம் உள்ளிட்ட துறைகளில் ஆப்பிரிக்க நாடுகளுடன் ஒத்துழைப்பு மேற்கொள்ள வேண்டும். ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதாரக் கட்டமைப்பின் வளர்ச்சிக்கு உதவியளித்து, ஆப்பிரிக்க ஒன்றியத்தின் 2063ஆம் ஆண்டு நிகழ்ச்சி நிரலைச் செயல்படுத்தத் துணை புரிய வேண்டும் என்று ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.

புத்தாக்கம் மூலம் வளர்ச்சியை முன்னேற்றும் வளர்ச்சித் திட்டத்தைச் சீனா விரைவாக்கி, சர்வதேச புத்தாக்கம் மற்றும் தொழில் நுட்ப ஒத்துழைப்பில் ஆழமாக பங்கெடுத்து, தெற்குத் தெற்கு ஒத்துழைப்பை ஆக்கப்பூர்வமாக மேற்கொண்டு, புதிதாக வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் கூட்டு வளர்ச்சிக்காக மேலதிக வாய்ப்புகளை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்