பிரிக்ஸ் பிளஸ் பேச்சுவார்த்தையில் ஷிச்சின்பிங் பங்கேற்பு

மதியழகன் 2018-07-28 11:30:52
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

‘பிரிக்ஸ் பிளாஸ்’ பேச்சுவார்த்தையில் ஷிச்சின்பிங்கின் பங்கேற்பு

பிரிக்ஸ் பிளஸ்("BRICS Plus")என்ற தலைவர்களின் பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்றது. இதில், சர்வதேச வளர்ச்சிக்கான ஒத்துழைப்பு, தெற்கு-தெற்கு ஒத்துழைப்புத் திட்டம் ஆகியவை பற்றி கலந்தாலோசிக்கப்பட்டு, பரந்த அளவிலான ஒருமித்த கருத்துகள் எட்டப்பட்டுள்ளன.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்று உரை நிகழ்த்தினார். பிரிக்ஸ் பிளாஸ்  ஒத்துழைப்பு குறித்த திட்டவட்டமான ஆலோசனைகளை முன்வைத்ததோடு,  புதிய சந்தை வாய்ப்பு உள்ள நாடுகள் மற்றும் வளரும் நாடுகளுடன் பரஸ்பர நன்மை தரும் கூட்டுறவை ஆழமாக்க வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் வேண்டுகோள் விடுத்தார்.

அன்று, தென்னாப்பிரிக்க அரசுத் தலைவர் ரமபோசா, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், இந்திய  தலைமை அமைச்சர் நரேந்திர மோடி ஆகிய பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள்,  அர்ஜின்டினா, எகிப்து, துருக்கி உள்ளிட்ட 21  நாடுகளின் தலைவர்கள் மற்றும் தலைவர்களின் பிரதிநதிகள், ஆப்பிரிக்க பிராந்தி அமைப்பின் தலைவர்கள் ஆகியோர் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

‘பிரிக்ஸ் பிளாஸ்’ பேச்சுவார்த்தையில் ஷிச்சின்பிங்கின் பங்கேற்பு

ஷச்சின்பிங் உரை நிகழ்த்தியபோது

தற்போதைய சூழ்நிலையில், புதிய சந்தை வாய்ப்பு உள்ள நாடுகள் மற்றும் வளரும் நாடுகள், பொதுவான வாய்ப்புகளையும் அறைகூவல்களையும் எதிர்கொள்கின்றன. ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவது மிகவும் முக்கியமானது என்று சுட்டிக்காட்டினார்.

பிரிக்ஸ் பிளஸ் ஒத்துழைப்பை விரிவாக்கும் விதமாக, பரஸ்பர நன்மை தரும் கூட்டுறவை ஆழமாக்கவும், வளர்ச்சியின் புதிய உந்து ஆற்றலைக் கண்டுபிடிக்கவும்,  பலதரப்பு வர்த்தக அமைப்பமுறையை பேணிக்காத்து சாதகமான வெளிப்புறச் சூழலை உருவாக்கவும், புதுமை ரக சர்வதேச உறவை அமைக்கவும் கூட்டாகச் செயல்பட வேண்டும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும் போது,

பிரிக்ஸ் உச்சி மாநாடு, மீண்டும் ஆப்பிரிக்காவில் நடத்தப்படுவது பெரிய முக்கியத்துவம் வாய்ந்தது. நடப்புப் பேச்சுவார்த்தையை வாய்ப்பாகக் கொண்டு, பிரிக்ஸ் நாடுகளுக்கும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இடையேயான கூட்டுறவை பன்முகமாக மேம்படுத்த வேண்டும். சர்வதேச ஒழுங்குமுறை எவ்விதமாக மாறினாலும், சீனா ஆப்பிரிக்காவின் வளர்ச்சிக்கு ஆதரவு அளித்து வருகிறது. இவ்வாண்டு செப்டம்பர்  திங்கள் நடைபெறும் சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் பெய்ஜிங் உச்சி மாநாடு,  இரு தரப்பு  ஒத்துழைப்புக் கூட்டாளியுறவுக்கு புதிய உந்து சக்தியை கொண்டு வரும் என்றும் ஷிச்சின்பிங் குறிப்பிட்டார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்