ஷிச்சின்பிங்-மொரிஷியஸ் தலைமைமை அமைச்சர் சந்திப்பு

மதியழகன் 2018-07-29 10:12:36
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஷிச்சின்பிங்-மொரிஷியஸ் தலைமைமை அமைச்சர் சந்திப்பு

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சனிக்கிழமை மொரிஷியஸ் தலைநகர்  போர்ட் லூயிஸில் அந்நாட்டுத் தலைமை அமைச்சர் பிரவிந்த் ஜகநாத்தை சந்தித்துப் பேசினார்.

சீனாவுக்கும் மொரிஷியஸுக்கும் இடையே தூதரக உறவு நிறுவப்பட்டு 46ஆவது ஆண்டு நிறைவு பெற்றது. இதனிடையில், இரு தரப்பு அரசியல் நம்பிக்கை தொடர்ந்து மேம்பட்டு வருவதோடு, பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புச் சாதனைகளும் அதிகரித்துள்ளன. மொரிஷியஸின் நல்ல நண்பராகவும் நல்ல கூட்டாளியாகவும் இருக்கும் சீனா, இரு நாடுகளின் நட்பு ஒத்துழைப்பு உறவை புதிய கட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறது என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

ஷிச்சின்பிங்-மொரிஷியஸ் தலைமைமை அமைச்சர் சந்திப்பு

ஷிச்சின்பிங்கின் இந்த நட்புப் பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்தது. சீனாவுடன் பரஸ்பர நன்மை தரும் நட்பு ஒத்துழைப்பை மேற்கொள்ள மொரிஷியஸ் விரும்புகிறது. பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதை எதிர்பார்க்கின்றேன் என்று ஜகநாத் சந்திப்பின்போது கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்