சீன அரசுத் தலைவரின் வெளியுறவு முயற்சிகள்

மதியழகன் 2018-08-07 15:47:25
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கடந்த அரையாண்டில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் தனது முயற்சியுடன், சீனாவின் தூதாண்மைப் பணியில் பல்வகை சாதனைகளைப் படைத்தார். இது, சர்வதேச வெளியுறவு அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது.

சீன அரசுத் தலைவரின் வெளியுறவு முயற்சிகள்

2018ஆம் ஆண்டின் துவக்கத்தில்,  பிரான்ஸ் அரசுத் தலைவர் சீனாவில் பயணம் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து, ஒரு மாதம் குறைந்த காலத்திலேய பிரிட்டன் தலைமை அமைச்சர், நெதர்லாந்து மன்னர், ஆகியோர் அடுத்தடுத்து சீனாவில் பயணம் மேற்கொண்டனர். சீனா-ஐரோப்பா இடையேயான உயர்நிலை பரிமாற்றங்களுக்கான அம்சங்களைத் தொகுத்தபோது, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவின் கட்டுக்கோப்புக்குள் உள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, முக்கிய அம்சமாகும் என்பது தெளிவாகிறது. இது குறித்து ஷிச்சின்பிங்கைச் சந்தித்தபோது, பிரிட்டன் தலைமை அமைச்சர் மே தெரேசா பேசுகையில்

ஆசியா மற்றும் உலகிற்கு ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு,  கொண்டு வரும் வாய்ப்புகளை வரவேற்கின்றோம். இம்முன்மொழிவு, ஆசியாவின் செழுமை மற்றும் உலகின் தொடரவல்ல வளர்ச்சிக்கு உதவும். ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியைத் ஆரம்பித்த உறுப்பு நாடுகளில் ஒன்றாக, பிரிட்டன், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழவின் இயல்பான ஒத்துழைப்புக் கூட்டாளியாக விளங்குகிறது என்று தெரிவித்தார்.

சீன அரசுத் தலைவரின் வெளியுறவு முயற்சிகள்

ஏப்ரல் 27, 28 ஆகிய நாட்களில், சீனாவிற்கு வருகை புரிந்த இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, வுஹான் நகரில் ஷிச்சின்பிங்கைச் சந்தித்து, அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தை நடத்தினார். இச்சந்திப்பில், இருதரப்பினர், மனம் திறந்த முறையில் உரையாடினர். சீன-இந்திய உறவு தொடர்பான பிரச்சினைகளை ஷிச்சின்பிங் வெளிப்படையாகக் காட்டியதோடு, வளர்ச்சிக்கான சீனாவின் தேர்வையும் அறிமுகம் செய்தார்.

சீன அரசுத் தலைவரின் வெளியுறவு முயற்சிகள்

இந்த சந்திப்பு மூலம், இந்திய-சீன உறவை வளர்ப்பதில் தன் நம்பிக்கை கொள்கிறது என்றும் இரு நாட்டுறவில் முக்கிய மைல் கல்லாக இருப்பதாகவும், மோடி தெரிவித்தார்.

வுஹான் சந்திப்பை புதிய துவக்கமாக கொண்டு, சீனா-இந்தியா இடையேயான உயர்நிலை பரிமாற்றம், முற்றிலும் புதிய கட்டத்தில் காலடியை எடுத்து வைத்துள்ளது. சீன-இந்திய உறவு மேலும் சீராகவும் விரைவாகவும் நிலைப்புதன்மையாகவும் முன்னேறிச் செல்வது உறுதி என்று நம்புகின்றோம்.

சீன அரசுத் தலைவரின் வெளியுறவு முயற்சிகள்

மேலும், கடந்த அரையாண்டில், சீன-வடகொரிய தலைவர்களுக்கிடையே மூன்று முறைச் சந்திப்பு நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.  ஜுன் 8ஆம் நாள் ரஷிய அரசுத் தலைவர் விளாதிமிர் புதின் சீனாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்.

சீன அரசுத் தலைவரின் வெளியுறவு முயற்சிகள்

இப்பயணத்தில், சீன மக்கள் குடியரசின் முதலாவது நட்புறவுப் பதக்கத்தை புதினுக்கு ஷிச்சின்பிங் வழங்கினார்.

அரசுத் தலைவர் தூதாண்மையின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்ட சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ,  ஷிச்சின்பிங்கின் தலைமையிலான முக்கிய தூதாண்மை நடவடிக்கைகள், சர்வதேச சமூகத்திடையே சீனா பற்றிய நன்மதிப்பை அதிகரித்து, சீனாவின் சர்வதேச தகுதிநிலையையும் செல்வாக்கினையும் உயர்த்தியுள்ளன என்று தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்