பேரிடர் தடுப்பு மற்றும் சிச்சுவான்-திபெத் இருப்புப் பாதைக் கட்டுமானத்திற்கு முயற்சிகள்: ஷிச்சின்பிங் வலியுறுத்தல்

2018-10-11 09:24:02
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இயற்கைப் பேரிடரைத் தடுக்கும் திறனை மேம்படுத்தவும், சிச்சுவான்-திபெத் இருப்புப் பாதையின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தை முழுமையாக தொடங்கி வைக்கவும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சீன அரசுத் தலைவரும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொதுச் செயலாளருமான ஷிச்சின்பிங் புதன்கிழமை வலியுறுத்தினார்.

அன்று நடைபெற்ற நிதி மற்றும் பொருளாதார விவகாரத்துக்கான மத்திய குழுவின் 3ஆவது கூட்டத்தில் அவர் இதைத் தெரிவித்தார்.

இயற்கை பேரிடர் தடுப்புப் பணி,  தேசிய பொருளாதாரம் மற்றும் மக்கள் வாழ்வுடன் தொடர்புடையது. பயனுள்ள மற்றும் அறிவியல்ப்பூர்வமான அமைப்புமுறையை உருவாக்குவதும், இயற்கைப் பேரிடர் தடுப்புத் திறனை உயர்த்துவதும், மக்களின் உயிர் மற்றும் உடமை, தேசிய பாதுகாப்பு ஆகியவற்றுக்கு உத்தரவாதம் அளிக்கும் என்று ஷிச்சின்பிங் கூறினார்.

 [படம்: VCG]

[படம்: VCG]

சிச்சுவான்-திபெத் இருப்புப் பாதை, நாட்டின் நீண்டகால நிலைப்புதன்மைக்கும் திபெத்தின் வளர்ச்சிக்கும் ஆழந்த முக்கியத்துவம் வாய்ந்த்து என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்