ஷி ச்சின் பிங்-இம்ரான் கான் சந்திப்பு

கலைமணி 2018-11-02 18:42:39
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஷி ச்சின் பிங்-இம்ரான் கான் சந்திப்பு

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின் பிங், பாகிஸ்தான் தலைமையமைச்சர் இம்ரான் கானை 2ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்தித்துரையாடினார்.

முதலாவது சீன இறக்குமதி பொருட்காட்சியில் கலந்துகொள்ள சீனாவுக்கு வருகை தந்துள்ள இம்ரான் கானுக்கு ஷி ச்சின் பிங் வரவேற்பு தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில்,

சீனாவும் பாகிஸ்தானும் நிரந்தர நெடுநோக்கு கூட்டாளிகளாகும். சீன-பாகிஸ்தான் ஒத்துழைப்பு இரு நாட்டு மக்களுக்கும் பிரதேச மற்றும் உலக அமைதி வளர்ச்சிக்கும் துணை புரியும் என்றார்.

சீனாவுடனான உறவு, பாகிஸ்தான் தூதாண்மை கொள்கையின் அடிப்படையாகத் திகழ்வதையும், சீன-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதையின் வளர்ச்சியை முன்னேற்றி வருவதையும், இம்ரான் கான் பலமுறை சுட்டிக் காட்டியுள்ளதை ஷி ச்சின் பிங் பாராட்டினார்.

பாகிஸ்தான்-சீன நட்புறவு, பாகிஸ்தான் பொது மக்களுக்கு ஆழ்ந்த நினைவைத் தந்துள்ளது என்று குறிப்பிட்ட இம்ரான் கான், சீனாவுடனான உறவைத் தொடர்து ஆழமாக்க பாகிஸ்தான் பாடுபடும் என்றும் பலதரப்பு விவகாரங்களில் சீனாவுடனான ஒத்துழைப்பை ஆழமாக்க பாகிஸ்தான் விரும்புவதாகவும் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்