சீன-ரஷிய தலைமையமைச்சர்களின் 23ஆவது சந்திப்பு

ஜெயா 2018-11-08 10:01:22
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-ரஷிய தலைமையமைச்சர்களின் 23ஆவது சந்திப்பு

சீன-ரஷிய தலைமையமைச்சர்களின் 23ஆவது சந்திப்பு

சீனத் தலைமையமைச்சர் லீக்கெச்சியாங் 7ஆம் நாள் மக்கள் மாமண்டபத்தில் ரஷியத் தலைமையமைச்சர் மெத்வதேவுடன் சீன-ரஷியத் தலைமையமைச்சர்களின் 23ஆவது சந்திப்பை நடத்தினார்.

சீனாவின் துணைத் தலைமையமைச்சரும், சீன-ரஷிய முதலீட்டு ஒத்துழைப்பு ஆணையம் மற்றும் எரியாற்றல் ஒத்துழைப்பு ஆணையத்தின் சீனத் தரப்புத் தலைவருமான ஹான்சேங்கும் இதில் கலந்து கொண்டார்.

லீக்கெச்சியாங் கூறுகையில், சீனாவும் ரஷியாவும் அண்டை நாடுகளாகும். இரு நாடுகளின் பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவு எப்போதும் நன்றாக நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. இரு நாடுகள் மற்றும் மக்களின் நலன்களுக்கு இது பொருந்தியது. உலகிற்கு மேலதிக நிதானமான ஆற்றலை ஊட்டுவதற்கும் இது துணை புரியும் என்று தெரிவித்தார்.

ரஷியாவுடன் இணைந்து, உலக வர்த்தக அமைப்பின் அடிப்படை கோட்பாட்டையும் எழுச்சியையும், தாராள வர்த்தகத்தையும் பேணிக்காத்து, பலதரப்புவாதத்தை ஆதரிக்கப் பாடுபட விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

ரஷியாவும் சீனாவும் ஒன்று மற்றதன் மேல் கொண்டுள்ள நம்பிக்கை உயர்நிலையில் உள்ளது. பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவு இடைவிடாமல் ஆழமாகியுள்ளது என்று மெத்வதேவ் கூறினார்.

சந்திப்புக்குப் பின், சீன-ரஷியத் தலைமையமைச்சர்களின் 23ஆவது சந்திப்பின் கூட்டறிக்கையில் அவர்கள் இருவரும் கூட்டாகக் கையொப்பமிட்டனர்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்