"பெரிய சீர்திருத்தம்" என்ற கண்காட்சியைப் பார்வையிட்ட ஷிச்சின்பிங்

மதியழகன் 2018-11-13 19:00:37
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

"பெரிய சீர்திருத்தம்" என்ற கண்காட்சியைப் பார்வையிட்ட ஷிச்சின்பிங்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத் தலைவருமான ஷிச்சின்பிங் 13ஆம் நாள், தேசிய அருகாட்சியகத்துக்குச் சென்று சீர்திருத்தம் மற்றும் திறப்புப் பணியின் 40ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையிலான “பெரிய சீர்திருத்தம்”என்ற கண்காட்சியைப் பார்வையிட்டார்.

சீர்திருத்தம் மற்றும் திறப்புப் பணி நடைமுறைப்படுத்தப்பட் கடந்த 40 ஆண்டுகளில், சீனாவில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எதிர்காலத்தில், புதிய யுகத்திற்கான சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த சோஷலிச சிந்தனையின் வழிகாட்டலில், விரிவான முறையில் சீர்திருத்தங்களை ஆழமாக்கி, வெளிநாட்டுத் திறப்பை விரிவாக்குவதை உறுதியாக கடைப்பிடிக்கும் நிலையில், சீனாவுக்கு மேலும் அருமையான எதிர்காலத்தை அடைவது உறுதி. முழு நாட்டின் பல்வேறு தேசிய இன மக்கள், உறுதியான நம்பிக்கை மற்றும் மனவுறுதியுடன், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியோடு சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிசப் பாதையிலும் சீர்திருத்தம் மற்றும் திறப்புப் பாதையிலும் முன்னேறிச் சென்று வருகின்றனர் என்பதை ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.

மேலும், ஷிச்சின்பிங்குடன் இணைந்து, லீ ட்சான்சூ, வாங்யாங், வாங்ஹுநிங், ட்சாவ் லேஜி, ஹான் ட்செங், வாங்ச்சிஷான் ஆகியோர்களும் இக்கண்காட்சியைப் பார்வையிட்டனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்