சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணியின் 40ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் மாநாடு

வாணி 2018-12-18 15:08:37
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணியின் 40ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் மாநாடு

சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணியின் 40ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் மாநாடு

சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணியின் 40ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் மாநாடு 18ஆம் நாள் செவ்வாய்க்கிழமை பெய்ஜிங்கில் கோலாகலமாக நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் இதில் முக்கிய உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில்,

சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பு சீன மக்கள் மற்றும் சீனத் தேசத்தின் வளர்ச்சி வரலாற்றில் ஒரு மாபெரும் புரட்சியாகும். இந்தப் புரட்சியானது சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிச இலட்சியத்தின் மாபெரும் வளர்ச்சியைத் தூண்டி வருகின்றது என்றார். சீன கம்யூனிஸ்ட் கட்சி 11வது மத்திய கமிட்டியின் 3வது முழு அமர்வுக்குப் பின், கட்சியின் தலைமையில் நாட்டின் பல்வேறு தேசிய இன மக்கள் ஒன்றுபட்டு, கட்டியமைத்து வரும் சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிச பாதை, தத்துவம், அமைப்புமுறை, கலாச்சாரம் ஆகியவை முற்றிலும் சரியாக இருப்பதைக் கடந்த 40 ஆண்டு நடைமுறை நிரூபித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அதேவேளையில், சீனாவின் வளர்ச்சி உலகின் வளர்ச்சியிலிருந்து பிரிக்கப்பட முடியாது. உலகின் செழுமைக்கும் சீனாவின் பங்கு தேவைப்படுகின்றது என்றார். ஆகவே, வெளிநாட்டுத் திறப்பில் சீனா ஊன்றி நிற்கும். மனித குலத்தின் பொது எதிர்காலத்தைக் கட்டியமைக்கக் கூட்டாகப் பாடுபட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணியின் 40ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் மாநாடு

சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணியின் 40ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் மாநாடு

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையை முக்கியமாகக் கொண்டு, பல்வேறு தரப்புகளுடன் பன்னாட்டு ஒத்துழைப்புக்கான புதிய மேடையை உருவாக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருகிறது. இந்தப் போக்கில் சீனா சொந்த நாட்டின் வளர்ச்சிக்காக இதர நாடுகளின் நலன்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாது. அதேசமயம், சொந்த நாட்டின் நேர்மையான உரிமைகளையும் நலன்களையும் கைவிடவும் மாட்டாது என்று அவர் மீண்டும் தெளிவுபடுத்தினார்.

கம்யூனிஸ்ட் கட்சி சீனாவின் ஆளும் கட்சியாகும். கட்சியைக் கண்டிப்பான முறையில் ஒழுங்கு செய்வதை பன்முகங்களிலும் வலுப்படுத்துவது மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் குறிப்பிட்டார். ஊழலை இயன்ற அளவில் ஒழித்து, நீதிதவறாது ஆட்சி புரியும் அரசை உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது மத்திய கமிட்டி, நாட்டின் வளர்ச்சிக்குப் புதிய இலக்கை உருவாக்கியுள்ளது. குறிப்பிட்ட வசதி படைத்த சமூகத்தைக் கட்டியமைப்பது முதல், நவீனமயமாக்கத்தை உருவாக்கி, நவீனமயமாக்க சோஷலிச வல்லரசைப் பன்முகங்களிலும் கட்டியமைக்கும் நெடுநோக்கு வெளியாகியுள்ளது என்று தனது உரையின் கடைசியில் ஷி ச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்