சீன-வட கொரிய அரசுத் தலைவர்களின் சந்திப்பு

சரஸ்வதி 2019-01-10 09:36:21
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-வட கொரிய அரசுத் தலைவர்களின் சந்திப்பு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், சீன அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங், ஜனவரி திங்கள் 8ஆம் நாள், சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள வட கொரிய தொழிலாளர் கட்சித் தலைவர் கிம் ஜொங் உன்னுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

2018ஆம் ஆண்டில் இரு தரப்புகளின் பொது முயற்சியுடன், சீன-வட கொரிய உறவின் புதிய அத்தியாயம் திறந்து வைக்கப்பட்டதை என்று ஷிச்சின்பிங் நினைவு கூர்ந்தார்.

இரு தரப்புத் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவு என்ற வாய்ப்பில், இரு நாடுகளின் பாரம்பரிய நட்புறவை வலுப்படுத்துவது என்பது இப்பயணத்தின் நோக்கமாகும் என்று கிம் ஜொங் உன் தெரிவித்தார்.

கொரிய தீபகற்ப நிலைமை குறித்து ஷிச்சின்பிங் பேசுகையில், கொரிய தீபகற்பத்தின் அமைதி மற்றும் நிதானத்தைப் பேணிக்காத்து, கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதம் இல்லாத நிலையை நனவாக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதை வெகுவாக மதிப்பிட்டார்.

2018ஆம் ஆண்டில், கொரிய தீபகற்ப நிலைமை தணிவடைந்துள்ளது. இதில் சீனா முக்கியப் பங்காற்றியுள்ளது. இதற்காக, வட கொரியா சீனாவுக்கு வெகுவான பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாக கிம் ஜொங் உன் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்