சீன மக்களுக்குப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்: ஷிச்சின்பிங

2019-02-03 18:52:20
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன மக்களுக்குப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்:  ஷிச்சின்பிங

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு தேசிய இன மக்களுக்கும், ஹாங்காங், மக்கௌ மற்றும் தைவான் உடன்பிறப்புகளுக்கும், வெளிநாடு வாழ் சீனர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

சீன மக்களுக்குப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்:  ஷிச்சின்பிங

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியும் சீன அரசவையும் 3ஆம் நாள் பெய்ஜிங்கில் நடத்திய 2019ஆம் ஆண்டு சீனப் புத்தாண்டு விழாக் கொண்டாட்டக் கூட்டத்தில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொதுச் செயலாளரும் மத்திய ராணுவ ஆணையத் தலைருமான ஷிச்சின்பிங் இந்த வாழ்த்துரை வழங்கினார்.

2018ஆம் ஆண்டு சீனாவின் பல்வேறு துறைகளில் சாதனைகளைத் தொகுத்துக் கூறிய போது, கட்சி மற்றும் நாட்டின் இலட்சியத்தின் வளர்ச்சியில் அனைத்து சாதனைகளும் மக்களின் பங்களிப்பு மற்றும் முயற்சியால் படைக்கப்பட்டுள்ளன. நெருக்கமாக மக்களுடன் சேர்ந்து செயல்பட்டால், சமாளிக்க முடியாத இன்னல்களும் தாண்ட முடியாத தடைகளும் இல்லாமால் இருக்கும் என்று ஷிச்சின்பிங் குறிப்பிட்டார்.

2019ஆம் ஆண்டு வளர்ச்சி பற்றி ஷிச்சின்பிங் பேசுகையில், நிலையான வளர்ச்சியை நனவாக்கும் வேளையில் முன்னேற்றம் காண்பது என்ற ஒட்டுமொத்த பணிக் கோட்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், உயர்தரமான வளர்ச்சியைத் தூண்டுவதில் நிலைத்து நிற்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். 2019ஆம் ஆண்டு, பொது மக்களுக்கு கிடைக்கும் நன்மையை அதிகரித்து, மகிழ்ச்சி மற்றும் பாதுகாப்பான வாழ்க்கைத் தரத்தை இடைவிடாமல் உயர்த்த வேண்டும் என்றும், பொருளாதாரத்தின் தொடர்ச்சியான மற்றும் சீரான வளர்ச்சியை நிலைநிறுத்தி, குறிப்பிட்ட வசதியான சமூகத்தை உருவாக்குவதற்கு அடிப்படையிட்டு, சிறந்த சாதனையுடன் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தற்போது, முதியோர்கள் அதிகம் உள்ள சமூகம் என்ற கால கட்டத்தில் சீனா நுழைந்துள்ளது. முதியவர்களுக்கான பணிகளைப் பெரிதும் வளர்த்து, முதியோர் அனைவருக்கும் அருமையான வாழ்க்கையை அளிக்க வேண்டும் என்று தனது உரையில் ஷிச்சின்பிங் குறிப்பிட்டார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்