சீன அரசுத் தலைவர்-இத்தாலி செனெட் அவையின் தலைவர் சந்திப்பு

கலைமணி 2019-03-23 14:33:43
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர்-இத்தாலி செனெட் அவையின் தலைவர் சந்திப்பு

22ஆம் நாள் இத்தாலி தலைநகர் ரோமில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், இத்தாலி செனெட் அவையின் தலைவர் இசபெதா அல்பெர்தி கசெலாதி அம்மையாரைச் சந்தித்துரையாடினார்.

சீனா இத்தாலி தூதாண்மையுறவு நிறுவப்பட்ட கடந்த 50 ஆண்டுகளில், இரு நாட்டுறவு சீராகவும் நிதானமாகவும் வளர்ந்து வருகின்றது. இத்தாலியுடன் இணைந்து, உயர் நிலை பரிமாற்றத்தை வலுப்படுத்தி, முக்கியப் பிரச்சினைகளில், ஒன்றுக்கு ஒன்று மதிப்பு அளித்து, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற ஆக்கப்பணியைக் கூட்டாகக் கட்டியமைக்க சீனா விரும்புகின்றது என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

நீண்டகாலமாக இத்தாலி-சீன நாட்டு மக்கள், ஒருவருக்கு ஒருவர் நம்பிக்கை கொண்டு வருகின்றனர். பொருளாதாரம், வர்த்தகம், பண்பாடு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கிடையிலான தொடர்பு நெருக்கமாகியுள்ளது. இந்நிலையில் இரு நாட்டு சட்டமியற்றல் நிறுவனங்களுக்கிடையிலான தொடர்பை முன்னேற்றி, இத்தாலி சீன நட்பார்ந்த ஒத்துழைப்பைத் தொடர்ந்து ஆழமாக்க இத்தாலி விரும்புவதாக கசெலாதி அம்மையார் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்