​சீன மற்றும் இலங்கை அரசுத் தலைவர்கள் சந்திப்பு

தேன்மொழி 2019-05-14 19:28:58
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன மற்றும் இலங்கை அரசுத் தலைவர்கள் சந்திப்பு

ஆசிய நாகரிகங்களுக்கிடையிலான உரையாடல் மாநாட்டில் கலந்துகொள்ளும் இலங்கை அரசுத் தலைவர் சிறிசேனாவை, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 14-ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்தித்துரையாடினார்.

அண்மையில் இலங்கையில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலைச் சீனா வன்மையாகக் கண்டித்தது. பயங்கரவாத எதிர்ப்புக்கான இலங்கை அரசின் முயற்சிகளுக்கு சீனா உறுதியாக ஆதரவு அளிக்கின்றது என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

சீன மற்றும் இலங்கை அரசுத் தலைவர்கள் சந்திப்பு

மேலும், இரு நாட்டு உத்திநோக்குக் கூட்டாளி உறவின் வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்றும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானம் பற்றிய இரு நாடுகளின் ஒத்துழைப்பையும், இலங்கை மக்களுக்கு நலன் தரும் திட்டப்பணிகளையும் முன்னேற்ற வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் குறிப்பிட்டார்.

தவிர, ஆசிய நாகரிகங்களுக்கிடையிலான உரையாடல் மாநாடு மூலம், இலங்கை தனது ஒளிவீசும் பண்பாட்டை வெளிக்கொணர வேண்டும் என்று ஷிச்சின்பிங் விருப்பம் தெரிவித்தார்.

சிறிசேனா கூறுகையில், ஆசிய நாகரிகங்களுக்கிடையிலான உரையாடல் மாநாடு, இலங்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானம் பற்றிய ஒத்துழைப்பை, சீனாவுடன் இணைந்து வலுப்படுத்தும் என்றும் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்