வெளிநாட்டு விருந்தினர்களுக்குச் சிறப்பு இரவு விருந்து

2019-05-15 00:05:36
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வெளிநாட்டு விருந்தினர்களுக்குச் சிறப்பு இரவு விருந்து

ஆசிய நாகரிகங்களுக்கிடையிலான உரையாடல் மாநாட்டில் கலந்துகொள்ளும் வெளிநாட்டு தலைவர்களை வரவேற்கும் வகையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் அவருடைய மனைவி பெங் லீ யுவான் அம்மையாரும் பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமண்டபத்தில் செவ்வாய்கிழமை இரவு விருந்து அளித்தனர்.

வெளிநாட்டு விருந்தினர்களுக்குச் சிறப்பு இரவு விருந்து

இதில் ஷிச்சின்பிங் உரைநிகழ்த்தியபோது, சீன அரசு மற்றும் மக்களின் சார்பில் இம்மாநாட்டில் கலந்துகொள்ளும் அனைத்து விருந்தினர்களுக்கும் வரவேற்பு தெரிவித்தார்.மேலும், வேறுபட்ட நாகரிகங்கள் கூட்டாக வளர்வதற்கு இம்மாநாடு பரிமாற்ற மேடையை உருவாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தவிர, இந்த மாநாட்டைத் தொடக்கப் புள்ளியாகக் கொண்டு, பல்வேறு நாடுகளின் நாகரிகங்கள், ஒன்றுக்கொன்று பரிமாற்றம் மேற்கொண்டு, மேலும் செழுமையடைய வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்