ஆசிய நாகரிகங்களுக்கிடையிலான உரையாடல் மாநாட்டில் ஷிச்சின்பிங்கின் முக்கிய உரை

2019-05-15 17:04:13
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஆசிய நாகரிகங்களுக்கிடையிலான உரையாடல் மாநாட்டில் ஷிச்சின்பிங்கின் முக்கிய உரை


ஆசிய நாகரிகங்களுக்கிடையிலான உரையாடல் மாநாடு 15-ஆம் நாள் புதன்கிழமை பெய்ஜிங்கில் துவங்கியது. இந்நிகழ்ச்சியின் துவக்க விழாவில் கலந்துகொண்ட சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், “நாகரிகங்களுக்கிடையிலான பரிமாற்றம் மற்றும் ஒன்றுக்கொன்று கற்றுக்கொள்வதை ஆழமாக்குதல், ஆசிய பொது சமூகத்தைக் கூட்டாக உருவாக்குதல்” என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்.

உலகில் இருக்கும் பொது அறைகூவல்களைச் சமாளித்து, அருமையான எதிர்காலத்தை வரவேற்பதற்கு, பொருளாதார மற்றும் அறிவியல் தொழில் நுட்பத்தின் ஆற்றல் மட்டுமல்ல, நாகரிகத்தின் ஆற்றலும் தேவைப்படுகின்றது. இதனால், நடப்பு உரையாடல் மாநாடு, வேறுபட்ட நாகரிகங்களுக்கிடையில் பரிமாற்றம் மேற்கொண்டு ஒன்றுக்கொன்று கற்றுக்கொளும் புதிய மேடையை உருவாக்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் விருப்பம் தெரிவித்தார்.

ஆசிய நாகரிகங்களுக்கிடையிலான உரையாடல் மாநாட்டில் ஷிச்சின்பிங்கின் முக்கிய உரை

அமைதி, கூட்டுச் செழுமை, திறப்பு, இணக்கம் ஆகியவற்றைக் கொண்ட ஆசியா படைக்கப்படுவதை ஆசிய மக்கள் பொதுவாக எதிர்ப்பார்க்கின்றனர். பலவகைப்பட்டது என்ற தன்மையினால், பல்வேறு நாகரிகங்களுக்கிடையே பரிமாற்றம் மேற்கொண்டு ஒன்றுக்கொன்று அனுபவித்து வளர்ச்சியைப் பெற்று வருகின்றன. உலகில் வேறுபட்ட நாடுகளுக்கும், தேசிய இனங்களுக்கும், பண்பாடுகளுக்கும் இடையிலான பரிமாற்றத்தை வலுப்படுத்தும் வகையில், ஷிச்சின்பிங் 4 ஆலோசனைகளை முன்வைத்தார்.

முதலாவதாக, ஒன்றுக்கொன்று மதிப்பு அளித்தல், சமத்துவ நிலையில் வாழ்தல் ஆகிய கோட்பாடுகளில் ஊன்றி நிற்க வேண்டும். இரண்டாவதாக, தனது நாட்டு நாகரிகத்தை வளர்ப்பதோடு, பிற நாகரிகங்களுக்கும் மதிப்பு அளிக்க வேண்டும். உலகில் வேறுபட்ட நாகரிகங்கள் கூட்டாக வளர்வதை ஏற்றுக்கொள்ள வேண்டும். மூன்றாவதாக, திறப்பு, இணக்கம் ஆகிய கோட்பாடுகளில் ஊன்றி நின்று, ஒன்றுக்கொன்று பயன்களைப் பெற வேண்டும். கடைசியாக, கால ஓட்டத்துடன் கூட்டாக முன்னேறி, புத்தாக்கம் மற்றும் வளர்ச்சியில் ஊன்றி நிற்க வேண்டும் ஆகியவை இந்த ஆலோசனைகளில் இடம்பெற்றுள்ளன.

ஆசிய நாகரிகங்களுக்கிடையிலான உரையாடல் மாநாட்டில் ஷிச்சின்பிங்கின் முக்கிய உரை

இதனிடையில், ஆசிய நாகரிகத்தின் முக்கியப் பகுதியான சீன நாகரிகம், இதர நாகரிகங்களுடன் இடைவிடாமல் பரிமாற்றம் மேற்கொண்டு வருவதுடன், திறப்புத் தன்மையையும் வெளிப்படுத்தி வருகின்றது என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

எதிர்காலத்தில், சீனா மேலும் திறந்த மனப்பான்மையுடன் உலகின் வளர்ச்சிப் போக்கில் பங்கெடுத்து, உயிராற்றலுடைய நாகரிக சாதனைகளைப் படைத்து உலகிற்குப் பங்காற்ற முயற்சி மேற்கொள்ளும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார.

தவிரவும், ஆசிய நாகரிகங்களுக்கிடையிலான உரையாடல் மாநாட்டில் கலந்துகொண்டுள்ள பல்வேறு பிரதிநிதிகள், ஆசிய நாகரிகம் மற்றும் உலக நாகரிகத்தின் அருமையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக, விரிவான முறையில் கருத்துக்களைப் பரிமாறி, அதற்குப் பங்கெளிப்பையும் நல்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்