சிடிஏசி துவங்கியது

2019-05-15 22:04:25
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஆசிய கலாச்சார கார்னிவலில் ஷிச்சின்பிங்கின் உரை

மே 15-ஆம் நாள் புதன்கிழமை இரவில் பெய்ஜிங் மாநகரில் நடைபெற்ற ஆசிய கலாச்சார கார்னிவலில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் உரைநிகழ்த்தினார். அவர் கூறுகையில்,

ஆசிய கலாச்சார கார்னிவலில் ஷிச்சின்பிங்கின் உரை


அனைவருக்கும் இரவு வணக்கம், ஆசியாவின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விருந்தினர்கள், கலைஞர்கள், இளைஞர்கள் முதலியோர் மகிழ்ச்சியாக ஒன்று திரண்டு, கார்னிவல் என்ற வடிவத்தில், இப்பண்பாட்டு விழாவைக் கொண்டாடுகின்றனர். முதலில், சீன அரசு மற்றும் மக்களின் சார்பில், இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள அனைத்து விருந்தினர்களுக்கும் கலைஞர்களுக்கும் நான் ஆரவாரமாக வரவேற்பு தெரிவிக்கிறேன் என்று ஷிச்சின்பிங் கூறினார்.

ஆசிய கலாச்சார கார்னிவலில் ஷிச்சின்பிங்கின் உரை


மேலும், ஆசியாவின் பல்வேறு நாடுகளும் ஒளிவீசும் தொன்மையான பண்பாடுகளைக் கொண்டுள்ளன. பல்வேறு நாடுகள் கொண்டுள்ள தனிச்சிறப்பு மிக்க பண்பாடுகள் இணக்கமாக கூட்டாக வளர்வதோடு, பரிமாற்றம் மேற்கொண்டும் வருகின்றன. ஆசிய நாகரிகம் பலவகைப்பட்டது என்ற தன்மை, ஆசிய பண்பாட்டுக்கு நீண்டகால உயிராற்றலை ஊட்டி வருகின்றது. இன்றைய இரவில், வண்ண ஆசிய பண்பாடு, வேறுபட்ட தேசிய இனங்களுக்கிடையே பரிமாற்றம் மற்றும் தொடர்பை முன்னேற்றுகின்றது. ஒளிமயமான ஆசியா, உயிராற்றலுடைய ஆசியா, அமைதி வழியில் முன்னேறும் ஆசியா ஆகியவை இதில் உலகிற்கு காட்சிக்கு வைக்கப்படுகின்றன என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

ஆசிய கலாச்சார கார்னிவலில் ஷிச்சின்பிங்கின் உரை

தவிரவும், பண்டைக்காலம் தொட்டு, அண்டை வீட்டுக்காரர்களுடன் அன்பாகப் பழகுவதில் சீன மக்கள் கவனம் செலுத்தி வருகின்றோம். ஆசிய நாடுகளுடன் இணைந்து முன்னேறி வளர்ச்சி அடைய வேண்டும் என்று சீன மக்கள் விரும்புகின்றோம். நாங்கள் சேர்ந்து மேலும் அழகான ஒளிமயமான உலகை உருவாக்கப் பாடுபடுவோம் என்று ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்