கட்சி மற்றும் அரசு நிறுவனங்களின் சீர்திருத்தச் சாதனைகளைப் பலப்படுத்த வேண்டும்- ஷிச்சின்பிங் வலியுறுத்தல்

மதியழகன் 2019-07-05 19:08:40
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கட்சி மற்றும் அரசு நிறுவனங்களின் சீர்திருத்தங்களில் அடைந்துள்ள முக்கிய பயன்களையும் மதிப்புள்ள அனுபவங்களையும் தொகுத்து, சீர்திருத்தச் சாதனைகளைப் பலப்படுத்த வேண்டும் என்றும், நாட்டின் ஆட்சி அமைப்புமுறை மற்றும் திறனின் நவீனமயமாக்கலை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் சீனக் கம்யூனிட்ஸ் கட்சி மத்திய கமிட்டிப் பொதுச் செயலாளரும் சீன அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் 5ஆம் நாள் வலியுறுத்தினார்.

வெள்ளிக்கிழமை பெய்ஜிங்கில் நடைபெற்ற கட்சி மற்றும் அரசு நிறுவனங்களின் சீர்திருத்தத் தொகுப்புக் கூட்டத்தில் ஷிச்சின்பிங் உரை நிகழ்த்தியபோது கூறியதாவது

கட்சி மற்றும் அரசு நிறுவனங்களின் சீர்திருத்தம், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்களைச் செயல்படுத்துவதில் முக்கிய நடவடிக்கையாகும். சீனாவின் ஆட்சி அமைப்புமுறை மற்றும் திறனை நவீனமயமாக்கும் நோக்கில் செயல்படும் முக்கிய நடவடிக்கையாகவும் இது திகழ்கிறது என்று வலியுறுத்தினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்