சீன-இந்திய மானிடப் பண்பாடு தொடர்பான உயர்நிலை பரிமாற்ற முறைமையின் 2ஆவது கூட்டம்

இலக்கியா 2019-08-13 09:58:19
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர், 12ஆம் நாள் பெய்ஜிங்கில் சீன-இந்திய மானிடப் பண்பாடு தொடர்பான உயர்நிலைப் பரிமாற்ற முறைமையின் 2ஆவது கூட்டத்துக்குத் தலைமைதாங்கினர். இக்கூட்டத்தில் கல்வி, பண்பாடு, தொல்பொருள் பாதுகாப்பு, சுற்றுலா, ஊடகம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த இரு நாட்டுப் பொறுப்பாளர்கள், இந்த உயர்நிலைப் பரிமாற்ற முறைமையின் முதல் கூட்டத்துக்குப் பின், இரு நாடுகள் படைத்துள்ள புதிய முன்னேற்றங்களை அறிமுகப்படுத்தினர். சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடி ஆகியோரின் முன்மொழிவின்படி, இந்த முறைமை, 2018ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

வாங் யீ நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கூறியதாவது:“சீன-இந்திய பாரம்பரிய நட்பை, பொது மக்களிடையில் பரப்பி, இரு நாட்டுத் தலைவர்களின் ஒத்த கருத்துகளை, நடைமுறையாக்க வேண்டும். பல்வேறு தரப்புகள் பங்கெடுக்கும் மானிடப் பண்பாட்டுப் பரிமாற்றக் கட்டுக்கோப்பைச் செழிப்பாக்கி, சீன-இந்திய நட்பு இலட்சியத்தில் ஈடுபட மேலதிக இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும்”என்று தெரிவித்தார்.

ஜெய்சங்கர் கூறுகையில், இந்திய-சீன நட்பு, இமயமலை கடந்து, ஆயிரம் ஆண்டுகளாக நிலவி வருகிறது. கடந்த ஆண்டில் இந்த முறைமையின் முதல் கூட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்ட மானிடப் பண்பாட்டு ஒத்துழைப்புத் திட்டப்பணிகள் சுமுகமாக நடைபெற்று வருவது, இரு நாட்டுறவின் வளர்ச்சிக்கு, பங்காற்றியுள்ளது. அத்துடன், மேலதிக பொது மக்களின் ஆதரவை இணைத்துள்ளது என்று தெரிவித்தார்.

இக்கூட்டத்தைத் தொடர்ந்து, வாங் யீயும், ஜெய்சங்கரும், 2020ஆம் ஆண்டு சீன-இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு நடவடிக்கைகளின் திட்டத்திலும், பண்பாடு, பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்ட துறைகள் தொடர்பான இரு தரப்பின் ஒத்துழைப்பு ஆவணங்களிலும் கையொப்பமிட்டனர்.

அதே நாள், அவர்கள் 4ஆவது சீன-இந்திய ஊடக உச்சிமாநாட்டின் நிறைவு விழாவில் பங்கெடுத்ததுடன், சீன-இந்தியத் திரைப்பட வார நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர். இவ்விழாவின் போது வாங் யீ கூறுகையில், இரு நாட்டுறவை வளர்ப்பது, மக்களின் விருப்பமாகும். ஊடகம் என்பது, இரு நாட்டு மக்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டு நட்பை அதிகரிப்பதற்கு இணைப்புப் பாலமாக உள்ளது. இரு நாட்டுத் தலைவர்கள், ஊடகப் பரிமாற்றத்துக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். அறிவுப்பூர்வமான மற்றும் அன்பான ஊடகச் சூழலை உருவாக்க, அவர்கள் ஊக்குவிக்கின்றனர் என்று தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்