அமெரிக்கப் பிரதிநிதிகளுடன் லீ கெச்சியாங் சந்திப்பு

சிவகாமி 2019-09-11 09:21:26
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-அமெரிக்கத் தொழில் முனைவோர்களின் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள சீனாவுக்கு வந்த அமெரிக்கப் பிரதிநிதிகளைச் சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங் செப்டம்பர் 10ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்தித்துப்பேசினார். இச்சந்திப்பின் போது சீன--அமெரிக்கப் பொருளாதார மற்றும் வர்த்தக உறவு குறித்து, அமெரிக்காவின் தொழிற்துறை மற்றும் வணிகத் துறையினர்களும் முன்னாள் அதிகாரிகளும் கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் பரிமாறிக் கொண்டனர்.

வெளிநாட்டுத் திறப்பு அளவைச் சீனா மென்மேலும் வலுப்படுத்தி வருகின்றது. சந்தைமயமாக்கம், சட்டமயமாக்கம் மற்றும் சர்வதேசமயமாக்கம் கொண்ட வணிகச் சூழலை உருவாக்கச் சீனா பாடுபட்டு வருகின்றது. உள்நாட்டில் பதிவு செய்துள்ள எல்லா தொழில் நிறுவனங்களையும் சமத்துவமான முறையில் கையாண்டு, அறிவு சொத்துரிமை பாதுகாப்புக்குச் சீனா மேலும் முக்கியத்துவம் அளித்து வருகின்றது என்று லீ கெச்சியாங் சுட்டிக்காட்டினார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்