​நவ சீனாவின் 70 ஆண்டுகளின் சாதனைக் கண்காட்சி

தேன்மொழி 2019-09-24 09:30:29
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டிப் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய இராணுவ ஆணையத்தலைவருமான ஷிச்சின்பிங், செப்டம்பர் 23-ஆம் நாள் பெய்ஜிங் கண்காட்சி மையத்தில், சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தறிக்காக அமைக்கப்பட்டுள்ள பெரிய அளவிலான கண்காட்சியைப் பார்வையிட்டார்.

அப்போது அவர் கூறுகையில், கடந்த 70ஆண்டுகளில் சீனா பெற்றுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனைகள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் தான், சீனாவுக்குத் தலைமைத் தாங்க முடியும் என்பதற்குச் சான்றுரைக்கின்றன என்று தெரிவித்தார்.

சீன நாட்டின் மாபெரும் மறுமலர்ச்சியையும் மக்களின் நலவாழ்வையும் நனவாக்கும் வகையில் சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சோஷலிசம் என்ற கொடியை உயர்த்திப் பிடித்து, தொடர்ந்து முன்னேறிச் செல்ல வேண்டும் என்று ஷிச்சின்பிங் வேண்டுகோள் விடுத்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்