சீனத் தேசிய விழா கொண்டாட்டத்தில் ஷிச்சின்பிங் உரை

வான்மதி 2019-10-01 12:46:16
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் வளர்ச்சி புதிய யுகத்தில் நுழைந்துள்ளது. உலகளவில் சீனாவின் செல்வாக்கு முன்கண்டிராத அளவிற்கு ஆழமாகவும் தொலைநோக்குடனும் வளர்ந்திருக்கிறது. அக்டோபர் முதல் நாள் காலை சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டம், அணிவகுப்பு, பொது மக்கள் பேரணி ஆகியவை தியன் ஆன் மென் சதுக்கத்தில் சிறப்பாக நடைபெற்றன.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய இராணுவ ஆணையத் தலைவருமான ஷிச்சின்பிங் கொண்டாட்டத்தில் உரை நிகழ்த்திய பிறகு, அணிவகுப்பைப் பார்வையிட்டார்.

காலை 10 மணிக்கு ஷிச்சின்பிங் உட்பட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நாட்டின் தலைவர்கள் தியன் ஆன் மென் வாயில் கோபுரத்தில் நின்று, சதுக்கத்திலுள்ள பல்வேறு துறைகளின் பிரதிநிதிகளுடனும், சீனா மற்றும் உலகிலுள்ள சீனர்களுடனும் இணைந்து, நவ சீனா நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடினர்.

கடந்த 70 ஆண்டுகளில் சீனக் கம்யூனஸ்ட் கட்சியின் தலைமையில் பல்வேறு தேசிய இனத்தவர்கள் ஒன்றுபட்டு, அற்புதமான சாதனைகளைப் படைத்துள்ளனர். சீனாவின் சர்வதேச தகுநிலையும் செல்வாக்கும் பெரிதும் உயர்ந்து வருகிறது. தலைவர் ஷிச்சின்பிங் உரை நிகழ்த்துகையில்—

கடந்த 70 ஆண்டுகளாக சீன மக்கள் ஒன்றுபட்டு ஒருமித்த சிந்தனையுடன் பாடுபட்டு, உலகின் கவனத்தை ஈர்க்கும் மாபெரும் சாதனைகளைப் பெற்றுள்ளனர். இன்றுவரை சோஷலிச சீனா உலகின் கிழக்கில் தலைநிமிர்ந்து நிற்கிறது. சீனாவின் தகுநிலையை அசைக்கவோ, சீன மக்கள் மற்றும் தேசத்தின் முன்னேற்றப் போக்கைத் தடுக்கவோ எந்த சக்தியாலும் முடியாது என்று தெரிவித்தார்.

மேலும், முன்னேற்றப் போக்கில் அமைதியான ஒன்றிணைப்பு, ஒரு நாட்டில் இரண்டு அமைப்பு முறைகள் என்ற கோட்பாட்டைக் கடைப்பிடித்து, ஹாங்காங் மற்றும் மகௌவின் நீண்டகால செழுமை மற்றும் அமைதியை நிலைநிறுத்தி, தைவான் நீரிணை இருகரை உறவின் அமைதியான வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்றும், முன்னேற்றப் போக்கில் அமைதியான வளர்ச்சிப் பாதையில் நடைபோட்டு, ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து கூட்டு வெற்றி பெறும் திறப்பு தொலைநோக்கைச் செயல்படுத்தி, உலகின் பல்வேறு நாடுகளின் மக்களுடன் இணைந்து, மனிதகுலத்தின் பொது எதிர்காலச் சமூகத்தைத் தொடர்ந்து உருவாக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மனிதகுலத்தின் வரலாற்றில் சீனாவின் கடந்த காலம் மிக முக்கியமானப் பதிவாகக் காணப்படுகிறது. சீனாவின் தற்காலம் மக்களின் முயற்சிகளோடு படைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. சீனாவின் எதிர்காலம் மேலும் அருமையாக இருப்பது உறுதி என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

அணிவகுப்பின் போது, வானில் கொடி காவல் அணி, நடைப் பயண அணி, சாதன அணி, விமான அணி ஆகியவை முறையே தியன் ஆன் மென் சதுக்கத்தைக் கடந்து சென்றன.

பிரமாண்டமான இந்த அணுவகுப்புக்குப் பிறகு, ஒரு லட்சம் பொது மக்கள், 70 அலங்கார ஊர்திகள் பங்குபெற்ற பேரணி நடைபெற்றது. தாய்நாட்டுக்கான வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் வெளிப்படுத்தப்பட்டதோடு, அமைதிச் சின்னமான 70 ஆயிரம் புறாக்களும் 70 ஆயிரம் பலூன்களும் சீன மக்களின் கனவை சுமந்து, சீனாவின் அழகான நிலத்தின் மேல் வானை நோக்கிப் பறந்து சென்றன.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்