சீன-இந்திய தலைவர்களின் வரலாற்றுச் சந்திப்பு

சரஸ்வதி 2019-10-12 09:26:14
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 11ஆம் நாள், சென்னையில் இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடியை சந்தித்துரையாடினார்.

தமிழ்நாட்டுக்கும் சீனாவுக்கும் இடையிலான தொடர்பு நீண்டகால வரலாறுடையது. பண்டைக்காலம் தொட்டு, தமிழ்நாடு சீனாவுடனான கடல் வழி வர்த்தகத் தொடர்பு நெருக்கமாக இருக்கிறது. பண்டைக்கால பட்டுப் பாதையின் முக்கிய கடல் சரக்குப் போக்குவரத்து முனையமாக இது விளங்கியது. அடுத்தாண்டு, சீன-இந்திய தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டாகும். இதனை முன்னிட்டு, மேலும் பரந்த துறைகளில், ஆழமான முறையில் மானுடப் பண்பாட்டு பரிமாற்றத்தை வலுப்படுத்த வேண்டும். இதனிடையே, பல்வேறு பண்பாட்டுப் பேச்சுவார்த்தையையும் பரிமாற்றத்தையும் கூட்டாக விரைவுபடுத்த வேண்டும் என்று ஷிச்சின்பிங் விருப்பம் தெரிவித்தார்.

பல்லாயிரம் ஆண்டுகளின் வளர்ச்சியின் மூலம், தற்போது, இந்தியாவும் சீனாவும் புதிதாக வளரும் முக்கிய பொருளாதார நாடுகளாக மாறியுள்ளன. பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது என்பது, இரு தரப்புகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது உலகின் முன்னேற்றத்தையும் செழுமையையும் விரைவுபடுத்தும் என்று மோடி தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்