ஷிச்சின்பிங்-பிரான்ஸ் அரசுத் தலைவர் சந்திப்பு

இலக்கியா 2019-11-06 10:10:26
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் அவரின் துணைவியார் பெங்லியுவானும், 5ஆம் நாளிரவு ஷாங்காயின் யூ யுவான் என்ற பூங்காவில் பிரான்ஸ் அரசுத் தலைவர் மெக்ரான், அவரின் துணைவியார் ப்ரிச்சிட் ஆகியோரைச் சந்தித்தனர்.

ஷிச்சின்பிங் கூறுகையில், சீனச் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி, சீன வளர்ச்சி மற்றும் முன்னேற்றங்கள் முதலியன ஷாங்காய் மாநகரின் வழி சிறப்பாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. ஷாங்காய் மாநகரின் மூலம், சீனா உலகத்துடன் மேற்கொண்டு வரும் உறவின் சமகால வளர்ச்சி காட்டப்பட்டுள்ளது. யூ யுவான் பூங்காவில் நீங்கள் சீனாவின் தோட்டக்கலை அழகையும், சீனப் பாரம்பரியப் பண்பாட்டையும் கண்டுரசிப்பதை விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.

மெக்ரான் குறிப்பிடுகையில், சீனா வெளிநாட்டுத் திறப்பு அளவை மேலும் விரிவாக்குவதை, பிரான்ஸ் வரவேற்கிறது. இதன் மூலம் இரு தரப்பும் ஒன்றுக்கொன்று நலன் தந்து கூட்டாக வெற்றி பெற வேண்டும் என்று தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்