ஷிச்சின்பிங், மக்ரோன் பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை

வான்மதி 2019-11-06 18:53:22
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிரான்சு அரசுத் தலைவர் மரக்ரோனுடன் 6ஆம் நாள் பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமண்டபத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஷிச்சின்பிங் பேசுகையில், ஐ.நா. பாதுகாப்பவையின் நிரந்தர உறுப்பு நாடுகளாகவும் கீழை மற்றும் மேலை நாகரிகங்களின் பிரதிநிதிகளாகவும் திகழும் சீனா மற்றும் பிரான்சு, நெடுநோக்குத் தொடர்பை வலுப்படுத்தி மேலதிக பொறுப்புகளுடன், பெரிய நாடுகளின் பொறுப்புணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

இருநாடுகளின் பரிமாற்றம், ஒத்துழைப்பு மற்றும் பன்முக வளர்ச்சிக்காக, அரசியல் நம்பிக்கையை அதிகரித்து பேணிக்காப்பது, பெரிய திட்டப்பணி ஒத்துழைப்பை முன்னேற்றுவது, ஒன்றுக்கு ஒன்று சந்தை திறப்பை விரிவாக்குவது, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் முன்மொழிவை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐரோப்பா-ஆசியா தொடர்பு திட்டத்துடன் இணைப்பது, புத்தாக்க ஒத்துழைப்பை ஆழமாக்குவது, நாகரிகப் பரிமாற்றத்தை மேம்படுத்துவது ஆகிய 6 இலக்குகளை ஷிச்சின்பிங் முன்வைத்தார்.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பல ஒத்துழைப்பு ஆவணங்கள் அவர்களின் பார்வையில் கையெழுத்தாயின.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்