சீன மற்றும் பிரேசில் அரசுத் தலைவர்களின் சந்திப்பு

சிவகாமி 2019-11-14 09:44:30
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நவம்பர் 13ஆம் நாள் பிரேசிலியாவில் பிரேசில் அரசுத் தலைவர் போல்சனாரோவைச் சந்தித்துப் பேசினார்.

பிரேசிலின் எதிர்கால வளர்ச்சி மற்றும் இரு நாட்டு ஒத்துழைப்பின் மீது சீனா நம்பிக்கை கொண்டுள்ளது. பிரேசிலுடன் வளர்ச்சி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு, வளர்ச்சிச் சாதனைகளைக் கூட்டாக அனுபவித்து, கூட்டுச் செழுமையை நனவாக்க விரும்புவதாக ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

மேலும், சீனாவுக்கும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்குமிடையிலான பன்முகப் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பைக் கூட்டாக முன்னேற்ற வேண்டும். பலதரப்புவாதத்தைப் பின்பற்றி, திறப்பு ரக உலகப் பொருளாதாரத்தை உருவாக்கி, புதிதாக வளரும் நாடுகளின் வளர்ச்சி உரிமை நலன்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

சீன மக்களின் மீது மதிப்பு மற்றும் நட்புணர்வைப் பிரேசில் மக்கள் கொண்டுள்ளனர். பிரேசிலின் எதிர்கால வளர்ச்சிக்கு இரு நாட்டு ஒத்துழைப்பின் முக்கியத்துவம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது என்று பிரேசில் அரசுத் தலைவர் போல்சனாரோ தெரிவித்தார். பிரேசில் ஏற்பாடு செய்த பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்களின் சந்திப்புக்குச் சீனா வழங்கிய ஆதரவிற்குப் போல்சனாரோ நன்றி தெரிவித்தோடு, பல்வேறு தரப்புகளுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, இச்சந்திப்பில் ஆக்கப்பூர்வமான சாதனைகளை முன்னேற்ற விரும்புவதாகவும் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்