11வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஷி ச்சின்பிங்கின் முக்கிய உரை

பூங்கோதை 2019-11-15 10:35:07
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

11வது பிரிக்ஸ் உச்சி மாநாடு உள்ளூர் நேரப்படி நவம்பர் 14ஆம் நாள் பிரேசிலின் தலைநகர் பிரேசிலியாவில் நடைபெற்றது. இதில் பிரிக்ஸ் ஒத்துழைப்பும், பொது அக்கறைக் கொண்ட முக்கிய சர்வதேசப் பிரச்சினைகளும் குறித்து, 5 நாடுகளின் தலைவர்கள் ஆழமாகக் கருத்துக்களைப் பரிமாற்றிக் கொண்டு, பொது கருத்துக்களை உருவாக்கினர். மேலும் இம்மாநாட்டில்

பிரிக்ஸ் ஒத்துழைப்பில் புதிய அத்தியாயத்தைக் கூட்டாக உருவாக்குவது என்ற தலைப்பில், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் முக்கிய உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது, பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, பலதரப்புவாதத்தைச் செயல்படுத்தி, அமைதி மற்றும் நிலைப்புத் தன்மையுடைய சூழலை உருவாக்க வேண்டும். மேலும், மனிதப் பண்பாட்டுப் பரிமாற்றத்தின் ஆழத்தை இடைவிடாமல் விரிவுப்படுத்த வேண்டும். வெளிநாட்டுத் திறப்புப் பணியில் சீனா ஊன்றி நின்று, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தை முன்னேற்றி, ஆசிய-பசிபிக் பொது சமூகம் மற்றும் மனித குலத்துக்கான பொது சமூகத்தை உருவாக்க சீனா முயற்சி செய்யும் என்றார்.

மேலும், பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்கள் அதேநாள் உள்ளரங்கக் கூட்டம் ஒன்றையும் நடத்தினர். ஷி ச்சின்பிங் இக்கூட்டத்தில் முக்கிய உரை நிகழ்த்தினார். அவர் பேசுகையில், பிரிக்ஸ் நாடுகள் ஒத்துழைப்புகளை மேற்கொள்வது, மனித சமூக வளர்ச்சி மற்றும் சர்வதேச நிலைமையின் மாற்றத்துக்குப் பொருந்தியது என்றார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்