கானோரா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் வெல்வது உறுதி:ஷி ச்சின்பிங்

சரஸ்வதி 2020-02-11 09:46:20
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 10ஆம் நாள் பெய்ஜிங்கில் கனோரா வைரஸ் தடுப்புப் பணியைக் கள ஆய்வு செய்தார். தற்போதையசூழ்நிலையில்தடுப்புப் பணி இன்னும் கடுமையாக இருக்கிறது. வைரஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு குறித்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் தீர்மானங்கள்மற்றும் ஏற்பாடுகளை, பல்வேறு நிலை கட்சிக் குழுகளும் அரசுகளும்நடைமுறைப்படுத்த வேண்டும். உறுதியான நம்பிக்கையுடன், அறிவியல்பூர்வமான சிகிச்சையின் மூலம், பொது மக்களைச் சார்ந்திருந்து, வைரஸ் பரவலைத் தடுக்க வேண்டும். நோய்க்கு எதிரான தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் போராட்டத்தில் வெல்வதைஉறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
10ஆம் நாள் பிற்பகல், பெய்ஜிங்கிலுள்ள குடியிருப்புப் பகுதி, மருத்துவமனை, நோய் தடுப்பு மையம் முதலியவற்றுக்கு ஷிச்சின்பிங் சென்று பார்வையிட்டார். அடிப்படை நிலை நோய் தடுப்புப் பணிகளை அறிந்து கொண்டதோடு, ஹூபெய் மாநிலத்தின் வுஹான் நகரில் மருத்துவமனைகளுடனும் காணொளி மூலம்தொடர்பு மேற்கொண்டார். அப்போது தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவப் பணியாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் சீனக் கம்யூனிட் கட்சி மத்திய கட்டி சார்பாக, ஷிச்சின்பிங் பாராட்டுமற்றும் ஆறுதலைத் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்