கரோனா வைரஸ் ஆய்வுப் பணி குறித்து ஷிச்சின்பிங் கள ஆய்வு

சரஸ்வதி 2020-03-02 19:49:35
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங், மார்ச் 2ஆம் நாள் பிற்பகல், இராணுவ மருத்துவவியல் ஆய்வகம், ட்சின்குவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவவியல் கழகம் ஆகியவற்றுக்கு நேரில் சென்று, கரோனா வைரஸ் தடுப்புக்கான அறிவியல் ஆய்வு மற்றும் மருத்துவச் சிகிச்சைப் பணியை கள ஆய்வு செய்தார்.

நோய் தடுப்பூசி, மருந்து வைரஸுக்கு எதிரான சோதனைப் பொருட்கள் ஆகியவற்றின் ஆய்வு மற்றும் பயன்பாடு குறித்த நிலையையும் ஷிச்சின்பிங் அறிந்துகொண்டார். அதோடு, நிபுணர்கள், ஆய்வாளர்கள் ஆகியோரை அவர் சந்தித்தார். கலந்தாய்வு கூட்டம் ஒன்றுக்கு ஷிச்சின்பிங் தலைமை தாங்கி, தொடர்புடைய வாரியங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் ஆய்வாளர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கேட்டறிந்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்