கரோனா வைரஸுக்கு எதிராக போராடுவதில் உறுதியாக வெற்றி வெறுவோம்

2020-03-06 20:19:16
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

புதிய ரக கரோனா வைரஸ் பரவல் திடீரென ஏற்பட்டது. இவ்வைரஸுக்கு எதிரான போராட்டம் முன் எப்போதும் இல்லாத அளவில் நடத்தப்பட்டது.

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பிறகு வரலாற்றில் இல்லாத அளவிற்கு மிக கடுமையான நோய் அறைகூவல் இது தான். சீன அரசு மற்றும் தலைவர்களுக்கும் பெரும் அறைகூவல் அதுவாகும்.

இந்த வைரஸ் பரவலைத் தடுப்பதில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றார். விரைவாக முடிவு எடுத்து, அடுத்தடுத்து கூட்டங்களை நடத்தி, முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்து, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மக்கள் போராட்டத்தில் தானாகவே தலைமை தாங்கினார்.

மக்களின் உயிர் பாதுகாப்பு மற்றும் உடல்நலம் ஆகியவற்றை முதலிடத்தில் வைக்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.

கடந்த ஒரு திங்களுக்கும் மேலாக, 10க்கும் அதிக முக்கிய கூட்டங்களுக்கு தலைமை தாங்கி, 2 முறைகளாக கள ஆய்வு செய்து, பலமுறை முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தது, மக்கள் முதன்மை என்ற கருத்தைக் கடைப்பிடித்து மனவுறுதியோடு அவர் செயல்படுவதை எடுத்துக்காட்டுகிறது.

மேலும், வைரஸ் பரவல் ஏற்பட்ட பிறகு, ஷிச்சின்பிங் பலமுறை வெளிநாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு, நோய் தடுப்புப் பணியில் சீனா பெற்றுள்ள முன்னேற்றத்தை விளக்கி செய்து, நோய் தடுப்பில் வெற்றி பெறும் நம்பிக்கையை வெளிக்காட்டினார்.
இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்