சீனத் தேசிய மக்கள் பேரவையின் கூட்டத்தொடர் தொடக்கம்

2020-05-22 15:26:51
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனத் தேசிய மக்கள் பேரவையின் கூட்டத் தொடர் 22 ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங்கில் தொடங்கியது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் உள்ளிட்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நாட்டின் முக்கியத் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர். மேலும் 2897 பிரதிநிதிகளும் துவக்க விழாவில் கலந்து கொண்டனர். இதில், சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங் 2019 ஆம் ஆண்டின் அரசுப் பணியறிக்கையை வழங்கி, 2020 ஆம் ஆண்டின் பணிக்கான முன்மொழிவுகளை வழங்கினார்.

2019 ஆம் ஆண்டில் சீராக இயங்கி வரும் சீனப் பொருளாதாரத்தால், பொது மக்களின் வாழ்க்கை மேம்பட்டுள்ளதாகவும் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 6.1 விழுக்காடு அதிகரித்து, 99 இலட்சத்து 10 ஆயிரம் கோடி யுவானை எட்டியுள்ளதாகவும் லீ கெச்சியாங் தெரிவித்தார்.

2020 ஆம் ஆண்டில் சீன அரசு, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பேணிக்காப்பதிலும் கவனம் செலுத்தும். வறுமை ஒழிப்புபணியை நிறைவேற்றி, குறிப்பிட்ட வசதி படைத்த சமூகத்தை உருவாக்கும் இலக்கை நனவாக்க பாடுபடும்.

இவ்வாண்டில் சீனாவின் நகரங்களில் 90 இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு, வேலைவாய்ப்பு இல்லாவிகிதம் 6 விழுக்காட்டுக்குள் கட்டுப்படுத்தப்படும் என்று அரசுப் பணியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டில், ஆக்கப்பூர்வமான நிதிக்கொள்கையையும் நிதானமான நாணயக் கொள்கையையும் மேற்கொள்ளவுள்ள சீன அரசு, புதிய ரக கரோனா வைரஸ் தடுப்புக்கு ஒரு இலட்சம் கோடி யுவான் சிறப்புத் தேசியக் கடனையும் அளிக்கவுள்ளது.

மேலும், இவ்வாண்டு, ஆக்கத் தொழிலின் முன்னேற்றத்தையும் புதிதாக வளரும் தொழிற்துறையின் வளர்ச்சியையும் முன்னேற்றவுள்ள சீன அரசு, ஆக்கத்தொழிலின் இடைக்கால மற்றும் நீண்டகால கடன் தொகையைப் பெருமளவில் அதிகரித்து, தொழிற்துறை இணையத்தை வளர்த்து, புத்திசாலித் தொழில் நுட்பம் மிக்க ஒன்றாக ஆக்கத் தொழிலை முன்னேற்ற வேண்டும். அதோடு, மீதமுள்ள வறிய மக்கள் அனைவரையும் இவ்வாண்டுக்குள் வறுமையிலிருந்து விடுவிப்பதைச் சீனா உத்தரவாதம் செய்ய வேண்டும். மீதமுள்ள வறிய மாவட்டங்களும் கிராமங்களும் சிக்கல்களைச் சமாளிக்க உதவியளித்து, வறுமை ஒழிப்புத் தொழிற்துறையின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்க வேண்டும். வறிய மக்கள் செல்வமடைய முழு மூச்சுடன் பாடு பட வேண்டும்.

பொதுச் சுதாதார அமைப்பு முறைமையின் கட்டுமானத்தைச் சீனா வலுப்படுத்தி, நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு முறைமையைச் சீர்திருத்தம் செய்யும். தொற்று நோய் அறிவிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை வெளியீட்டை மேம்படுத்தி, தகவலை வெளிப்படையாக வெளியிடும் தன்மையை நிலைநிறுத்தும். தடுப்பூசி, மருந்துகள், வேகமானச் சோதனை முதலிய தொழில் நுட்பங்கள் தொடர்பான ஆராய்ச்சிக்குரிய முதலீடுகள் அதிகரிக்கப்படும் என்றும் அந்த அரசுப் பணியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்