கொவைட்-19க்கு எதிரான ஒற்றுமை குறித்த சீன-ஆப்பிரிக்க சிறப்பு உச்சிமாநாட்டில் ஷி ச்சின்பிங் உரை

வாணி 2020-06-17 23:50:14
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn


கொவைட்-19க்கு எதிரான ஒற்றுமை குறித்த சீன-ஆப்பிரிக்க சிறப்பு உச்சிமாநாடு ஜுன் 17ஆம் நாள் இணைய வழி நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் இம்மாநாட்டுக்குத் தலைமை தாங்கி சிறப்புரை வழங்கினார். அவர் கூறுகையில்,

திடீரென ஏற்பட்ட கொவைட்-19 நோய் தொற்று முழு உலகினைத் தாக்கியது. இதுவரை இலட்சக்கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர் என்று தெரிவித்தார்.பெரும் விலை கொடுத்த சீன மக்கள், அயரா முயற்சி மூலம் உள்நாட்டில் நோய் பரவலை பயன் தரும் முறையில் கட்டுப்படுத்தியுள்ளனர். ஆனால், புதிய சுற்று தொற்று வருதன் மீது தொடர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளின் அரசுகளும் மக்களும் வலுவான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு நோய் பரவல் நிலைமையைத் தணிவு செய்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் சீனாவும் ஆப்பிரிக்க நாடுகளும் ஒன்றுக்கு ஒன்று உதவி செய்து வருகின்றன என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் கொவைட்-19 நோய் தடுப்புக்காக அவர் 4 முன்மொழிவுகளை முன்வைத்தார்.

ஒன்று, நோய் தடுப்பில் இரு தரப்புகளும் மனவுறுதியுடன் ஒத்துழைக்க வேண்டும். ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சீனா தொடர்ந்து இயன்ற அளவில் உதவி செய்யும். தவிரவும், நோய் தடுப்பூசி ஆராய்ந்து வெற்றிகரமாகத் தயாரிக்கப்பட்ட பிறகு, ஆப்பிரிக்க நாடுகளுக்கு முதலில் விநியோகிக்கப்படும் என்று ஷி ச்சின்பிங் வாக்குறுதி அளித்தார்.

இரண்டு, சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பை உறுதியாக முன்னேற்ற வேண்டும். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக் கட்டுமானத்தை முன்னெடுக்கும் அதேவேளையில், சுகாதாரம், உற்பத்தி மீட்சி, வாழ்வாதாரம் ஆகிய துறைகளுக்கு மேலதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

மூன்று, பலதரப்பு வாதத்தை உறுதியாகக் கடைபிடிக்க வேண்டும்.

நான்கு, சீன-ஆப்பிரிக்க நட்புறவை உறுதியாக முன்னேற்ற வேண்டும் என்று ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்