ஷென்ஜென் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் 40ஆவது ஆண்டு நிறைவுக் கூட்டம்

சிவகாமி 2020-10-14 20:38:48
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஷென்ஜென் சிறப்பு பொருளாதார மண்டலம் நிறுவப்பட்ட 40ஆவது ஆண்டு நிறைவுக் கூட்டம் 14ஆம் நாள் ஷென்ஜென் மாநகரில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

ஷென்ஜென் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் அனுபவத்தைத் தொகுத்து, சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணியை முன்னேற்றுவது தான், இம்மாநாட்டை நடத்துவதன் நோக்கமாகும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், உயிராற்றல் மிக்க ஷென்ஜென் நகரம், சீனாவின் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுப் பணியின் மகத்தான ஆற்றலை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்தார்.

2019ஆம் ஆண்டு ஷென்சென் நகரின் மொத்த உற்பத்தி மதிப்பு, 2 லட்சத்து 70 ஆயிரம் கோடி யுவானை எட்டியது. இந்நகரின் மொத்த பொருளாதார ஆற்றல் ஆசிய நகரங்களில் ஐந்தாவது இடம் வகிக்கிறது. 2019ஆம் ஆண்டு ஷென்ஜென் நகரின் நபர்வாரி ஆண்டு வருமானம், 62 ஆயிரத்து 500 யுவானாகும். குறிப்பிட்ட வசதியான சமூகத்தை உருவாக்கும் குறிக்கோளை நனவாக்கும் சீன நகரங்களில் ஷென்ஜென் நகர் முன்னணியில் உள்ளது.

சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற கட்டுமானத்தில் சீனா தொடர்ந்து ஈடுபடும் என்று ஷி ச்சின்பிங் சுட்டிக்காட்டினார். இக்கட்டுமானத்தில் கடைபிடிக்க வேண்டிய 10 கோட்பாடுகளை அவர் விவர்த்தார்.

தற்போது, சீர்திருத்தம் புதிய வரலாற்றுப் புள்ளியில் இருக்கிறது. ஷென்ஜென் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் எதிர்கால வளர்ச்சி, மேலும் உயர் நிலையுடைய சோஷலிச சந்தைப் பொருளாதார அமைப்பு முறைத் தேவைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.

சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிச முன் மாதிரிப் பிரதேசமாக ஷென்ஜென் மாற வேண்டும் என்று தெரிவித்த ஷி ச்சின்பிங், குவாங்துங்-ஹாங்காங்-மக்கௌ பெரிய விரிகுடா பகுதியின் கட்டுமானத்தின் மூலம், ஒரு நாட்டில் இரண்டு அமைப்புமுறைகள் என்ற இலட்சியத்தை முனேற்ற வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் கூறுகையில்,

விரிவான ஆலோசனை, கூட்டு பங்களிப்பு மற்றும் கூட்டு வெற்றியை நனவாக்கும் விதம் சீனாவில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் கட்டுமானத்தில் பல்வேறு நாடுகள் பங்கெடுக்க சீனா வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்