​ சீன-தாஜிக்ஸ்தான் அரசுத் தலைவர்களது பேச்சுவார்த்தை

நிலானி 2017-09-01 09:28:17
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

 சீன-தாஜிக்ஸ்தான் அரசுத் தலைவர்களது பேச்சுவார்த்தை

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 31ஆம் நாள் மக்கள் மாமண்டபத்தில் தாஜிக்ஸ்தான் அரசுத் தலைவர் எமோமாலி ராக்மோனோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சீனாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டு வளர்ந்து வரும் சந்தைகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் பங்கேற்பது ராக்மோனோவின் இப்பயணத்தின் நோக்காமாகும். சீன-தாஜிக்ஸ்தான் பன்முக தொலைநோக்குக் கூட்டாளியுறவை உருவாக்கி இரு நாட்டுறவின் மேலும் பெரிய வளர்ச்சியை முன்னேற்ற வேண்டுமென இரு நாட்டுத் தலைவர்களும் ஒருமனதாகத் தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தைக்குப் பின், சீன-தாஜிக்ஸ்தான் பன்முக தொலைநோக்குக் கூட்டாறியுறவை உருவாக்கும் கூட்டறிக்கையில் இரு நாட்டுத் தலைவர்களும் கையொப்பமிட்டு வெளியிட்டனர். மேலும், சீன-தாஜிக்ஸ்தான் ஒத்துழைப்புத் திட்டமும், அறிவியல், வேளாண்மை, எரியாற்றல் உள்ளிட்ட பத்துக்கும் மேலான ஒத்துழைப்பு ஆவணங்களும் இருவரது முன்னணியிலும் கையெழுத்தாகின.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்