சீன அரசுத் தலைவர்-இந்தியத் தலைமை அமைச்சர் சந்திப்பு

வாணி 2017-09-05 18:28:45
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஷிச்சின் பிங்-மோடி சந்திப்பு

சீன அரசுத்தலைவர் ஷிச்சின் பிங் இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியை 5ஆம் நாள் சியாமென் நகரில் சந்தித்து உரையாடினார். அப்போது பேசிய ஷிச்சின்பிங், சீனாவும் இந்தியாவும் ஒன்றுக்கு ஒன்று வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கி, அச்சுறுத்தல் அற்ற நிலைப்பாட்டில் ஊன்றி நிற்க வேண்டும் என்று தெரிவித்தார். சீனாவின் வளர்ச்சியை இந்தியா சரியாகவும் இயல்பாகவும் மதிப்பிட வேண்டும். சக வாழ்வு, ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றி இரு நாடுகளுக்கும் உரிய சரியான தேர்வாகும் என்றும், இருநாட்டுறவு சீராக வளர்வதை முன்னேற்ற வேண்டும் என்றும்  ஷிச்சின் பிங் விருப்பம் தெரிவித்தார். 

இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடி பேசுகையில்,பிரிக்ஸ் உச்சி மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. தற்போதைய உலகில் மாற்றங்கள் அதிகமாக ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிரிக்ஸ் நாடுகள் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும். இந்த நோக்கில் நடப்பு உச்சி மாநாடு முக்கியப் பங்காற்றியுள்ளது. எல்லைப் பிரதேசத்தின் அமைதியைப் பேணிக்காப்பதில் சீனாவுடன் கூட்டாக முயற்சி செய்ய விரும்புவதாகத் தெரிவித்த அவர், சர்வதேச அலுவல்களில் இந்தியா, சீனாவுடன் இணைந்து பரிமாற்றத்தை அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்