வங்காளத்தேசத்தில் நுழைந்த மியன்மார் அகதிகளின் நிலைமையில் ஐ.நாவின் கவனம்

ஜெயா 2017-09-13 16:18:45
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

மியன்மாரிலிருந்து வங்காளத்தேசத்துக்குச் சென்ற அகதிகளின் நிலைமையில் கவனம் செலுத்தி வருகின்றன என்றும் தொடர்புடைய மீட்புப் பணிகள் அடுத்தடுத்து நடைபெற்று வருகின்றன என்றும் ஐ.நாவின் பல அமைப்புகள் 12ஆம் நாள் தெரிவித்துள்ளன. ஆனால், தற்போதைய அவசர மீட்புப் பணிகள் இந்தப் பெருவாரியான அகதிகளின் தேவையை நிறைவு செய்ய முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

மியன்மாரின் ரக்ஹினே மாநிலத்தில் ஆகஸ்ட் 25ஆம் நாள் பல பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தன. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இத்தாக்குதல்களாலும், அதற்குப் பின் நடைபெற்ற துடைத்தொழிப்புச் செயல்களாலும், அதிகமான ரேகிங்யா இன மக்கள் வங்காளத்தேசத்தில் நுழைந்துள்ளனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்