ஐ.நா. பாதுகாப்பவையின் தீர்மானத்துக்கு வட கொரியா எதிர்ப்பு

2017-09-13 18:35:15
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஐ.நா. பாதுகாப்பவை 11ஆம் நாள் ஏற்றுக் கொண்ட வட கொரியா மீதான தீர்மானம் சட்டவிரோதமானது என்றும், இத்தீர்மானத்துக்கு கடுமையான கண்டனம் மற்றும் பன்முக எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் வட கொரிய வெளியுறவு அமைச்சகம் 13ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் தலைமையில் வட கொரியா மீதான தடை நடவடிக்கை மீண்டும் மேற்கொள்ளப்பட்டதால், வட கொரியா சொந்தமாகத் தெரிவு செய்த பாதை சரியானது என்பதை அறிந்து கொண்டுள்ளது. நாட்டின் இறையாண்மை மற்றும் வாழ்வுரிமையைப் பேணிக்காக்கும் வகையில் தனது ஆற்றலை வட கொரியா விரைவாக வலுப்படுத்தும் என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்