உ.பி-யில் நச்சு வாயு வெளியேறி 200 குழந்தைகள் பாதிப்பு

2017-10-11 10:47:42
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உத்தரப் பிரதேச மாநிலம், ஷாம்லி மாவட்டத்தில் உள்ள சர்க்கரை ஆலையிலிருந்து நச்சு வாயு வெளியேறியதில் பள்ளிக்குழந்தைகள் சுமார் 200 பேர் உடல் நல பாதிப்புக்குள்ளாயினர்.  இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்தது.

இத்தொழிற்சாலை, பள்ளிக்கூடத்துக்கு அருகில் அமைந்துள்ளது. வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்டவை ஏற்படுவதாக மாணவர்கள் புகார் அளித்தவுடன், அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 175 பேர் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 23 மாணவர்கள், சிறப்பு மருத்துவ சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சர்க்கரைத் தொழிற்சாலையில் இருந்த கழிவுகளை அழிப்பதற்காக, ரசாயனத்தை ஊழியர்கள் பயன்படுத்தியபோது, இந்த நச்சுவாயு பரவியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் மருத்துவ சிகிச்சையில் எவ்வித குறைபாடும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுமாறு ஷாம்லி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்