ஆய்வு மற்றும் வளர்ச்சியில் சீனாவின் ஒதுக்கீடு

வான்மதி 2017-10-11 12:44:24
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுப் புள்ளிவிபரப் பணியகம், அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகம், நிதி அமைச்சகம் ஆகியவை இணைந்து, 2016ஆம் ஆண்டு சீனத் தேசிய அறிவியல் தொழில் நுட்பத்துக்கான ஒதுக்கீடு பற்றிய கணக்கெடுப்பை அண்மையில் வெளியிட்டன. புள்ளிவிபரங்களின்படி, கடந்த ஆண்டு ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான சீனாவின் மொத்த நிதி ஒதுக்கீடு 1 லட்சத்து 56 ஆயிரத்து 767 கோடி யுவானை எட்டி, 2015ஆம் ஆண்டில் இருந்ததை விட 10.6 விழுக்காடு அதிகரித்தது. 

மேலும், ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான சீனாவின் ஒதுக்கீட்டு விகிதம் நிலையாக அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் சீனா எட்டிய 2.11 விழுக்காடு, ஐரோப்பிய நாடுகளின் 2.08 விழுக்காடான சராசரி நிலையைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்