ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவுக்கு சர்வதேச நாணய நிறுவனங்களின் ஆதரவு

பூங்கோதை 2017-10-13 18:29:06
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற சீனாவின் முன்மொழிவு, உலகத்திற்கு நன்மை பயக்கும். சீனாவுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இம்முன்மொழிவின் வெற்றியை முன்னேற்ற விரும்புவதாக, உலக வங்கி, புரைமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான ஐரோப்பிய வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, யுரேசிய வளர்ச்சி வங்கி உள்ளிட்ட 10க்கும் மேலான சர்வதேச நாணய நிறுவனங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் அக்டோபர் 12ஆம் நாள் வாஷிங்டனில் தெரிவித்தனர்.

சீனத் துணை நிதி அமைச்சர் ச்சூ குவாங்யௌ பேசுகையில், வெளிநாட்டு நிறுவனங்கள் ஏற்பாடு செய்த, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை பற்றிய உயர் நிலையான ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்வது இதுவே முதல் முறை. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவில் சர்வதேசச் சமூகத்தின் பெரும் கவனத்தையும், உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு, இம்முன்மொழிவின் மேலதிக பங்குகளின் மீதான எதிர்பார்ப்பையும் இக்கூட்டம் வெளிப்படுத்தியுள்ளது. இம்முன்மொழிவு, தற்கால உலகிற்கு மிக முக்கிய பொது நலன் என்று இந்நிறுவனங்களின் உறுப்பினர்கள் ஒரு மனதாக தெரிவித்துள்ளனர் என்றார் அவர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்