சீனாவில் நுகர்வு அதிகரிப்பும் இணையம் மூல சில்லறையும்

வான்மதி 2017-11-14 16:40:17
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இவ்வாண்டின் அக்டோபரில் சீன சமூக நுகர்வுப் பொருட்களின் மொத்த சில்லறை விற்பனைத் தொகையின் அதிகரிப்பு வேகம் ஓரளவு குறைந்துள்ளது. ஆனால் இணையம் மூலமான விற்பனை வலுவான வளர்ச்சிப் போக்கை நிலைநிறுத்தியுள்ளது.

சீன தேசிய புள்ளிவிபர பணியகம் 14ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, அக்டோபரில் சமூக நுகர்வுப் பொருட்களின் சில்லறை விற்பனைத் தொகை 3 லட்சத்து 42 ஆயிரத்து 410 கோடி யுவானாகும். அதன் அதிகரிப்பு வேகம் செப்டம்பரில் இருந்ததை விட 0.3 விழுக்காடு குறைவு. இது, கடந்த ஆண்டின் அக்டோபரில் இருந்ததற்கு சமமாகும். ஜனவரி முதல் அக்டோபர் வரை சமூக நுகர்வுப் பொருட்களின் மொத்த சில்லறை விற்பனைத் தொகை கடந்த ஆண்டின் இதேகாலத்தில் இருந்ததை விட 10.3 விழுக்காடு அதிகம். அதன் அதிகரிப்பு வேகம் மாறவில்லை.

இதனிடையே, இணையம் மூலமான சில்லறை விற்பனை விரைவான அதிகரிப்பை நிலைநிறுத்தி வருகிறது. சமூக நுகர்வுப் பொருட்களின் சில்லறை விற்பனையில் அதன் விகிதமும் அதிகரித்து வருகிறது. ஜனவரி முதல் அக்டோபர் வரை சீனாவில் இணையம் மூலமான சில்லறை விற்பனைத் தொகை 5 லட்சத்து 53 ஆயிரத்து 500 கோடி யுவானாகும். கடந்த ஆண்டின் இதேகாலத்தில் இருந்ததை விட 34 விழுக்காடு அதிகம். அதன் அதிகரிப்பு வேகம் முன்பை விட 8.3 விழுக்காடு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்