கிழக்காசிய பொருளாதார பொது சமூகத்தின் கட்டுமானத்தை சீனா முன்னேற்றும்

ஜெயா 2017-11-14 18:45:00
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன தலைமையமைச்சர் லீக்கெச்சியாங் உள்ளூர் நேரப்படி 14ஆம் நாள் முற்பகல், பிலிப்பைன்ஸ் சர்வதேச கூட்ட மையத்தில், 20ஆவது ஆசியான்-சீன-ஜப்பான்-தென் கொரிய தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டர். ஆசியானின் 10 உறுப்பு நாடுகளின் தலைவர்களும், ஜப்பானிய தலைமையமைச்சர் சின்சோ அபே, தென் கொரிய அரசுத் தலைவர் மூன் ஜாயெ யின் ஆகியோரும் இதில் கலந்து கொண்டர்.

லீக்கெச்சியாங் கூறுகையில், சீனா, வெளிநாட்டுத் திறப்பை நிலைநிறுத்தி, பன்முக திறந்த புதிய நிலைமையை உருவாக்குவதை முன்னேற்றி வருகிறது. மேலும் திறந்த, மேலும் செழுமையான சீனா, சீன மக்களுக்கு பயன்தரும் போது, கிழக்காசியா உள்ளிட்ட உலகில் பல்வேறு நாடுகளுக்கும் மேலும் அதிக சந்தைகள், வளர்ச்சி, முதலீடு, ஒத்துழைப்பு உள்ளிட்ட வாய்ப்புகளை அளிக்கும். நாம் கையோடு கைகோர்த்து, கிழக்காசிய பொருளாதார பொது சமூகத்தின் உருவாக்கத்தை முன்னேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்