சீனாவில் உறுதியாக முன்னேற்றப்படும் சீர்திருத்தம்

வான்மதி 2017-11-21 10:37:48
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய இராணுவக் கமிட்டித் தலைவரும், மத்திய கமிட்டியின் சீர்திருத்தத்தை பன்முகங்களிலும் ஆழமாக்குவதற்கான தலைமைக் குழுத் தலைவருமான ஷிச்சின்பிங், 20ஆம் நாள் பிற்பகல் இத்தலைமைக் குழுவின் முதலாவது கூட்டத்துக்குத் தலைமை தாங்கி முக்கிய உரை நிகழ்த்தினார். கடந்த சில ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தத்தில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. புதிய பணயத்தில் இந்தச் சீர்திருத்தம் தொடர்ந்து முன்னேற்றமடைய வேண்டும். பல்வேறு இடங்களும் துறைகளும் கட்சியின் 19ஆவது தேசிய மாநாட்டின் எழுச்சியை கற்றுக் கொண்டு அதனைச் செயல்படுத்த வேண்டும். அதில் உள்ளடங்கிய சீர்திருத்த எழுச்சி, ஏற்பாடு, கோரிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தொடர்ந்து ஆய்வு செய்து முயற்சி மேற்கொண்டு, மன உறுதியுடன் இச்சீர்திருத்தத்தை முன்னெடுக்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.

கட்சி மற்றும் நாட்டின் வளர்ச்சி குறித்து கட்சியின் 19ஆவது தேசிய மாநாட்டில் புதிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சீர்திருத்தத்தை ஆழமாக்குவதற்கான புதிய கடமையும் முன்வைக்கப்பட்டுள்ளது. சீர்திருத்த பணிகளுக்கு முன்பை விட மேலும் பெருமளவு மற்றும் பயனுள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டிற்கான சீர்திருத்த பணிகளை மேலும் உயர்வான வரையறையில் நிறைவேற்றி, நடைமுறைக்கு ஏற்ற நடவடிக்கைகளின் மூலம் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பு கொள்கையின் 40ஆவது ஆண்டு நிறைவை வரவேற்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்