இந்திய ரெபோ ரேட்டில் மாற்றம் இல்லை

2017-12-07 11:05:01
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்திய ரிசர்வ் வங்கி பிற வங்கிகளுக்கு அளிக்கும் கடனின் வட்டி விகிதமான ரெபோ ரேட்டில் எவ்வித மாற்றத்தையும் ஆர்பிஐ கொண்டு வரவில்லை. அது, தொடர்ந்து 6 விழுக்காட்டிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. புதன்கிழமை நடைபெற்ற நாணயக் கொள்கைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேபோல் பிற வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு அளிக்கும் தொகையின் வட்டி விகிதமான ரிசர்வ் ரெபோ ரேட்டின் விகிதமும் 5.75 விழுக்காட்டிலேயே நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் தலைமையிலான 6 நபர் கொண்ட நாணயக் கொள்கை கமிட்டி, ஐந்தாவது இருமாதங்களுக்கு ஒருமுறை கொள்கை அறிக்கையை வெளியிட்டதாக நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். பணவீக்க விகிதம் உரிய விகிதத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதை நாணயக் கொள்கை கமிட்டி அங்கீகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்