ஆப்கானிஸ்தானில் ஆயுததாரிகள் மீதான வான் தாக்குதல்

2017-12-07 15:25:56
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கடந்த இரண்டு நாட்களில், ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு மற்றும் தலிபான் அமைப்பு மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் மொத்தம் 31 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள நன்கர்ஹார் மாநிலத்தின் அச்சின் பிரதேசத்தில் 5ஆம் நாள் ஐ.எஸ் ஆயுததாரிகள் பதுங்கியிருக்கும் இடங்கள் மீது வான் தாக்குதல் நடத்தப்பட்டது. மொத்தம் 25 ஆயுததாரிகள் கொல்லப்பட்டனர் என்று அம்மாநில அரசு 6ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

ஆப்கானிஸ்தான் அரசுப் படையின் செய்தித்தொடர்பாளர் அலி ரேசா ஜாம்ஷிதி அதே நாள் செய்தியாளிடம் கூறுகையில், அன்று விடியற்காலைவட பகுதியில் உள்ள ஃபாரியாப் மாநிலத்தில் தாலிபான் அமைப்பின் ஆயுததாரிகள் பதுங்கியிருக்கும் இடம் மீது ராணுவ வட்டாரம் வான் தாக்குதல் நடத்தியது என்றும், இதில் 6 ஆயுததாரிகள் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்