ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இணைய மூல பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சி

2017-12-07 15:34:11
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2017ஆம் ஆண்டுக்கான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இணையம் மூல பயங்கரவாத எதிர்ப்பு கூட்டு ராணுவ பயிற்சி 6ஆம் நாள் சீனாவின் ஃபுஜியன் மாநிலத்தின் சியா மன் நகரில் நடைபெற்றது. இவ்வமைப்பின் 8 உறுப்பு நாடுகள் மற்றும் பிரதேச பயங்கரவாத எதிர்ப்பு வாரியம் ஆகியவற்றைச் சேர்ந்த பிரதிநிதிக் குழுக்கள் இதில் கலந்து கொண்டுள்ளன.

இவ்வமைப்பின் பிரதேச பயங்கரவாத எதிர்ப்பு வாரியத்தின் செயற்குழுத் தலைவர் சிசோயேவ் பேசுகையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்தது, இவ்வமைப்புக்கு புதிய உயிராற்றலை வழங்கியுள்ளது என்றும், 8 நாடுகள் கூட்டாக கலந்து கொள்ளும் முதலாவது பிரதேச பயங்கரவாத எதிர்ப்பு கூட்டு பயிற்சி இதுவாகும் என்று தெரிவித்தார். பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் அதி தீவிரவாதத்தை எதிர்ப்பதில் இவ்வமைப்பின் உறுப்பு நாடுகளின் மனவுறுதியையும், செயல் ஆற்றலையும் இப்பயிற்சி வெளிப்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்