ஷிச்சின்பீங் தென் கொரிய அரசுத் தலைவருடன் தொலைபேசியில் பேச்சு

2018-01-12 09:32:47
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங் 11ஆம் நாள் அழைப்புக்கிணங்க, தென் கொரிய அரசுத் தலைவர் மூன் ஜ யினுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினார்.

இதற்கு முன்பு, மூன் ஜ யின் சீனாவில் வெற்றிகரமாக பயணம் மேற்கொண்டார். அப்போது, சீன-தென் கொரிய நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளியுறவை வளர்த்து, முக்கிய பிரதேசம் மற்றும் சர்வதேசப் பிரச்சினைகள் குறித்து ஒத்த கருத்துக்களை எட்டி, ஒன்றுக்கு ஒன்று நம்பிக்கையை அதிகரித்து, ஒத்துழைப்பை ஆழமாக்குவது குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர். புத்தாண்டில், தென் கொரியாவுடன் சேர்ந்து, நெடுநோக்குப் பரிமாற்றத்தை வலுப்படுத்தி, பயனுள்ள ஒத்துழைப்பை முன்னேற்றி, உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளை உரிய முறையில் கையாண்டு, இரு நாட்டுறவை புதிய முன்னேற்றத்திற்கு உயர்த்தி, பிரதேசத்தின் அமைதி மற்றும் நிதானத்தைக் கூட்டாக வளர்க்க சீனா விரும்புவதாக ஷிச்சின்பீங் சுட்டிக்காட்டினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்