அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தம் பற்றிய விவாதம்

மதியழகன் 2018-01-12 14:44:41
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு ஜனவரி 12ஆம் நாள் கூட்டம் நடத்தியது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் சில விதிகளைத் திருத்துவது தொடர்பான ஆலோசனைகள், இந்த கூட்டத்தில் முக்கியமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது மத்திய கமிட்டியின் 2ஆவது முழு அமர்வு ஜனவரி 18, 19ஆகிய நாட்களில் பெய்ஜிங்கில் நடைபெறுமெனவும், இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது

அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தம், நாட்டின் அரசியல் துறையில் பெரிய நிகழ்வாகும். புதிய யுகத்தில் ஒட்டுமொத்த நிலையில் இருந்தும், நெடுநோக்கு பார்வையிலும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி மேற்கொண்டுள்ள முக்கிய முடிவு இதுவாகும். சட்டப்படியாக நாட்டை நிர்வகிப்பதையும், நாட்டு நிர்வாக அமைப்புமுறை மற்றும் ஆட்சித் திறனின் நவீனமயமாக்கலை முன்னெடுப்பதற்காக மேற்கொண்டுள்ள முக்கிய நடவடிக்கையும் இதுவாகும் என்று இக்கூட்டத்தில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்