3 மாதங்களில் சீனாவின் முதலீடு அதிகரிப்பு

வான்மதி 2018-02-13 15:24:06
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன வணிக அமைச்சகம் 13ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிபரங்களின்படி, ஜனவரி திங்கள் வெளிநாடுகளில் சீனாவின் நிதி சாரா நேரடி முதலீடு 1080 கோடி அமெரிக்க டாலரை எட்டி, கடந்த ஆண்டின் இதேகாலத்தில் இருந்ததை விட 39.7 விழுக்காடு அதிகரித்துள்ளது. கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து நேர்மறையிலான அதிகரிப்பு காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜனவரியில், சீனாவின் உள்நாட்டு முதலீட்டாளர்கள் உலகின் 99 நாடுகள் மற்றும் பிரதேசங்களிலுள்ள 955 வெளிநாட்டு தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்தனர். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள 46 நாடுகளுக்கான முதலீடு முன்பை விட 50 விழுக்காடு அதிகரித்துள்ளது. சிங்கப்பூர், பாகிஸ்தான், இலங்கை, மலேசியா, லாவோஸ், வியட்நாம், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இம்முதலீடு முக்கியமாக செய்யப்பட்டது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்