வடகொரியாவும் அமெரிக்காவும் முக்கிய காலடியை எடுத்து வைக்க வேண்டும்:சீனா விருப்பம்

மதியழகன் 2018-02-13 19:52:38
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கொரிய தீபகற்ப பிரச்சினையைத் தீர்க்கும் போக்கில், உரையாடல் மற்றும் பேச்சுவார்த்தை நடத்தாமல், தடைகளை மட்டும் விதிப்பது பயனற்றது. நெருக்கடியை பேச்சுவார்த்தை நடத்தும் உந்து சக்தியாக மாற்ற வேண்டும் என்று சீன வெளியுறவுத் துறைச் செய்தித் தொடர்பாளர் கேங் சுவாங் 13ஆம் நாள் செவ்வாய்கிழமை தெரிவித்தார்

கொரிய தீபகற்பத்தின் நிலைமை குறித்து தொடர்புடைய தரப்பு அண்மையில் வெளியிட்ட புதிய கருத்துகளுக்கு பதில் அளித்தபோது,கேங் சுவாங் இவ்வாறு கூறினார்.

வடகொரியாவும் அமெரிக்காவும், தற்போதைய வாய்ப்பைப் பயன்படுத்தி, உள்ளார்ந்த விருப்பத்தை வெளிக்காட்டி,முக்கியத்துவம் வாய்ந்த காலடியை உறுதியுடன் எடுத்து வைக்க வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்